பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 203.

பிறகு உள்ள 119-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு :

திண்ணனாருடைய பக்கத்தில் நின்றுகொண்டிருந்த வர்களாகிய நாணன் என்னும் வேடனும், காடன் என்னும் வேடனும் பிறகும், பைத்தியம் மிகுதியாக முதிர்ச்சியை இவன் அடைந்தான்; என்ன காரணமோ? அருமையாகப் பெறுவதற்குரிய மாமிசத்தை நெருப்பில் வாட்டித் தன்னு டைய வாயில் இட்டுக் கடித்து.பார்த்து வேறு வேறாக வாயி லிருந்து உமிழ்கிறான்; பெரிய பசியை உடையவன் ஆனா லும் இவன் ஒரு பேச்சையும் பேசுவது இல்லை; எங்களுக்கும் உரிய பங்குகளைக் கொடுக்கும் இயல்பை இவன் தெரிந்து கொள்ளவில்லை; இனிய சுவை இல்லாத வேறு மாமிசத் துண்டுகளை வெளியில் எறிகிறான். பாடல் வருமாறு:

மருங்குகின் றவர்கள் பின்னும், மயல் மிகமுதிர்ந்தான் என்னே? அரும்பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கிவே றுமிழா

- கின்றான்; பெரும்பசி உடைய னேனும் பேச்சிலன், எமக்கும் பேறு. தரும்பரி சுணரான்; மற்றைத் தசைபுறத் தெறியா - கின்றான்.'

மருங்கு-திண்ணனாருடைய பககத்தில். நின்றவர்கள்நின்றுகொண்டிருந்தவர்களாகிய நாணன் என்னும் வேட னும் காடன் என்னும் வேடனும். பின்னும்-பிறகும். மயல்பைத்தியம். மிக-மிகுதியாக. முதிர்ந்தான்-முதிர்ச்சியை இவன் அடைந்தான். இவனுக்குப் பைத்தியம் முற்றிவிட் டது' என்பது கருத்து. என்-இதற்கு என்ன காரணம்? ஏ: அசைநிலை. அரும்பெறல்-அருமையாகப் பெறுவதற்குரிய, இறைச்சி-மாமிசத்தை. காய்ச்சி-நெருப்பில் வாட்டி. அதுக்கி-அதைத் தன்னுடைய வாயில் இட்டுக் கடித்துப் பார்த்து. வேறு-வேறு வேறாக உமிழா நின்றான் - வாயி லிருந்து உமிழ்கிறான். பெரும்-பெரிய. பசி-பசியை, உடையனேனும்-இவன் உடையவன் ஆனாலும். பேச்சு