பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多Q4 பெரிய புராண விளக்கம்-4

இலன்-ஒரு வார்த்தையையும் பேசுவது இல்லை. எமக்கும். எங்கள் இருவருக்கும். பேறு-உரிய பங்குகளை ஒருமை பன்மை மயக்கம். தரும்-அளிக்கும். பரிசு-இயல்பை. உணரான்-இவன் தெரிந்துகொள்ளவில்லை. மற்றைஇனிய சுவை இல்லாத வேறு. த், சந்தி. தசை-மாமிசத் துண்டுகளை ஒருமை பன்மை மயக்கம். புறத்து-வெளியில். எறியா நின்றான்.எறிகிறான்.

அடுத்து வரும் 120-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'இந்தத் திண்ணன் குடுமித்தேவரிடம் பைத்தியத்தைக்

கொண்டு விட்டான்; இந்தப் பைத்தியத்தைப் போக்குவ தற்கு ஆகிய பரிகாரம் ஒன்றையும் யாம் தெரிந்துகொண் டிருக்கவில்லை; பூசாரிச்சியாகிய தேவராட்டியை இவனு டைய தந்தையாகிய நாகனுடன் சென்று நாம் அவளை அழைத்துக் கொண்டுவந்து இந்தப் பைத்தியத்தைப் போக்க வேண்டும்; அதற்காக வேட்டையாடும் அந்தக் காட்டிற்கு வேலை ஆட்களையும் அழைத்துக்கொண்டு செல்வோம்' என்று நினைத்து அந்த நாணன் என்னும் வேடனும், காடன் என்னும் வேடனும் சென்றார்கள். பாடல் வருமாறு :

‘' தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்றித

- ன்ைத் தீர்க்கல் ஆவதொன் றறியோம்; தேவ ராட்டியை காக னோடு

மேவிநாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும்; அவ்வேட்

- டைக் கானில்

ஏவல்.ஆட் களையும் கொண்டு போதும்' என்றெண்ணிப்

போனார்.

இந்தத் திண்ணன்-இந்தத் திண்ணனாகிய நம்முடைய தலைவன். தேவு-குடுமித் தேவரிடம். மால்-பைத்தியத்தை. கொண்டான்-கொண்டு விட்டான். மற்று: அசை நிலை. இதனை-இந்தப் பைத்தியத்தை. த், சந்தி. தீர்க்கல்-போக்கு வதற்கு. ஆவது ஆகிய பரிகாரம். ஒன்று-ஒன்றையும். அறி யோம்-யாம் தெரிந்து கொண்டிருக்கவில்லை. தேவராட்