பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 205

டியை-பூசாரிச்சியாகிய தேவராட்டியை. தேவராட்டிதெய்வ ஆவேசம் வந்து ஆடுகிற பெண்மணி. நாகனோடுஇவனுடைய தந்தையாகிய நாகனுடன். மேவி-சென்று. நாம்-நாம் இருவரும். கொணர்ந்து-அழைத்துக் கொண்டு வந்து, தீர்க்கவேண்டும்-இந்தப் பைத்தியத்தைப் போக்க வேண்டும். அவ்வேட்டைக்கானில்-வேட்டையாடும் அந்தக் காட்டிற்கு; உருபு மயக்கம். ஏவல் ஆட்களையும்-பணிபுரியும் வேலைக்காரர்களையும். கொண்டு - அழைத்துக்கொண்டு. போதும் நாம் இருவரும் செல்வோம். என்று.என. எண்ணி. நினைத்து. ப்: சந்தி. போனார். அந்த நாணன் என்னும் வேடனும் காடன் என்னும் வேடனும் சென்றார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து வரும் 121-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

திண்ணனார் காட்டில் வாழும் வேடர்களாகிய நான னும் காடனும் அவ்வாறு சென்றதைப் பார்க்கவில்லை; வேகத்தோடு தொன்னைக்குள் மாமிசமாகிய உணவை: வைத்துக்கொண்டு குடுமித்தேவருக்கு அபிடேகம் செய்ய எண்ணிப் பெருமையைப் பெற்ற பொன்முகவியாற்றில் ஒடும் நல்ல நீரைத் தம்முடைய துய்மையான திருவாயில் பெய்து, எடுத்துக்கொண்டு தாம் பறித்த துாய நறுமணம் கமழும் திருப்பள்ளித்தாமத்தைத் தம்முடைய த லை ம யி ரி ல் பொருந்துமாறு வைத்துக்கொண்டார். பாடல் வருமாறு :

கானவர் போன தோரார்; கடிதினில் கல்லை யின்கண் ஊனமு தமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி மாங்தி நன்னீர் தூய வாயினிற் கொண்டு கொய்த துரநறும் பள்ளித் தாமம் குஞ்சிமேல் துதையக் கொண் ' ' . - L-mir. * * கானவர்-திண்ணனார் காட்டில் வாழும் வேடர்களாகிய நாணனும் காடனும்; ஒருமை பன்மை மயக்கம். போனது. அவ்வாறு சென்றதை. ஒரார்-கவனிக்கவில்லை. கடிதினில். வேகத்தோடு; உருபு மயக்கம். கல்லையின் கண்-தொன்