பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பெரிய புராண விளக்கம்-4

னைக்குள். ஊன்-மாமிசமாகிய, அமுது-உணவை. அமைத் துக்கொண்டு-வைத்துக்கொண்டு. மஞ்சனம் - அபிடேகம். ஆட்ட-குடுமித்தேவருக்குச் செய்ய. உன்னி-எண்ணி. மாபெருமையைப் பெற்ற நதி-பொன்முகலி ஆற்றில் ஒடும். நல்நல்ல. நீர்-நீரை. தூய தம்முடைய தூயதாகிய வாயினில்திருவாயில். கொண்டு-பெய்து எடுத்துக்கொண்டு. கொய்ததாம் பறித்த. துர-தூய. நறும் நறுமணம் கமழும். பள்ளித் தாமம் - திருப்பள்ளி யெழுச்சியின்போது காளஹஸ்தீ சுவரருக்கு அணியும் மாலையை. குஞ்சிமேல்-தம்முடைய தலைமயிரின்மேல். துதைய-பொருந்துமாறு. க்: சந்தி. கொண்டார்-வைத்துக் கொண்டார்.

பின்பு வரும் 122-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

திண்ணனார் வில்லைக் கொடுமையான அம்போடு ஒரு கையில் பிடித்துக்கொண்டு, தொன்னைக்குள் வைத்திருக் கும் தூய மெல்லிய மாமிசமாகிய நல்ல விருந்துணவை மற் றொரு கையில் எடுத்துக்கொண்டு, 'இனியவராகிய எம்முடைய தலைவராகிய குடுமித் தேவர் மிகவும் பசியோடு இருப்பார்.’’ என இரக்கத்தை அடைந்து, ஏக்கத்தைப் பெற்று மிகவும் வேகமாகச் சென்று இறைவராகிய காளஹஸ்தீசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் காளத்தி மலையை அடைந்தார். பாடல் வருமாறு: -

  • தனுஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப் புனிதமெல் இறைச்சி நல்ல போனகம் ஒருகை ஏந்தி இனிய எம் பிரானார் சாலப் பசிப்பர். என்றிரங்கி ஏங்கி கணிவிரைந் திறைவர் வெற்பை கண்ணினார் திண்ண னார்தாம்.'

இந்தப் பாடல் விற்பூட்டுப் பொருள் கோள் அமைந்தது. திண்ணனார்தாம்-திண்ணனார். தாம் ஈற்றசைநிலை. தனுவில்லை. ஒரு கையில்-ஒப்பற்ற தம்முடைய இடக்கையில். வெய்ய-கொடிய, சரத்துடன்-அம்போடு. தாங்கி-எடுத்துக்