பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 207

கொண்டு. க், சந்தி. கல்லை-தொன்னைக்குள் வைத்திருக் கும். ப்: சந்தி. புனித-துரய. மெல்-மெல்லிய. இறைச்சிமாமிசமாகிய, நல்ல-இனிய சுவையைப் பெற்ற நல்வ.

போனகம்-விருந்துணவை. ஒரு-ஒப்பற்ற கை-தம்முடைய வலக்கையில், ஏந்தி. எடுத்துக்கொண்டு. இனிய-இனியவ ராகிய, வினையாலணையும் பெயர். எம்-எம்முடைய. பிரா னார்-தலைவாாகிய குடுமித் தேவர். சால-மிகவும். ப்: சந்தி. பசிப்பர்-பசியோடு இருப்பார். என்று-என. இரங்கி-இரக் கத்தை அடைந்து, ஏங்கி-ஏக்கத்தைப் பெற்று. நனி.மிகவும். விரைந்து-வேகமாகச் சென்று. இறைவர்-எங்கும் நிறைந் திருப்பவராகிய காளத்தீசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். வெற்பை-காளத்தி மலையை. நண்ணி வினார்-அடைந்தார்.

பின்பு உள்ள 123-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'திண்ணனார், 'நம்முடைய தலைவராகிய குடுமித் தேவர் களைத்துப் போய் விட்டார்' என்று எண்ணி வேக மாகப் போய் அடைந்து காளத்தி மலையில் முளைத்து எழுந்த எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவராகிய காளஹஸ்தீசு வரரைப் பார்த்துத் தம்முடைய தலையின் மேல் செருகிக் கொண்டிருந்த மலர்களைத் தம்முடைய காலில் வளைவாக அணிந்திருந்த பொலிவை உடைய செருப்பினால் தள்ளி விட்டுத் தம்முடைய திருவாயில் பெய்து கொண்டு வந்திருந்த அபிடேக நீரை விளையச் செய்த பக்தியை உமிழ்பவரைப் போல மலங்கள் அற்றவராகிய காளஹஸ்தி சுவரருடைய திருமுடியின் மேல் உமிழ்ந்தார். பாடல் வருமாறு:

க. இளைத்தனர் நாயனாரென் றீண்டச் சென் றெய்தி

- வெற்பின் முளைத்தெழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக்

காலில்