பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2i}3 பெரிய புராண விளக்கம்-4

வளைத்தபொற் செருப்பால் மாற்றி வாயின்மஞ்

சனநீர் தன்னை விளைத்தஅன்பு மிழ்வார் போல விமலனார் முடிமேல்

விட்டார்."

நாயனார்-திண்ணனார் தம்முடைய தலைவராகிய குடுமித்தேவர். இளைத்தனர்-களைத்துப் போய்விட்டார். என்று-என எண்ணி. ஈண்ட-வேகமாக ச் சந்தி. சென்றுபோய். எய்தி-அடைந்து. வெற்பின்-காளத்தி மலையில். முளைத்து எழு-முளைத்து எழுந்த முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி.' என்று திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியதைக் காண்க. முதலை-எல்லாத். தேவர்களுக்கும் முதல் தேவராகிய காளஹஸ்தீசுவரரை. க்: சந்தி. கண்டு-பார்த்து. முடிமிசை - அவருடைய திருமுடியின் மேல் இருந்த மலரை-மலர்களை; இவை சிவகோசரியார் அருச்சித்தவை. க்: சந்தி, காவில்-தம்முடைய திருவடியில். வளைத்த்-வளைவாக அணிந்திருந்த பொன்பொலிவை உடைய, செருப்பால்-செருப்பினால், மாற்றி-- தள்ளிவிட்டு. வாயில்-தம்முடைய திருவாயில் பெய்து கொண்டு வந்திருந்த, மஞ்சன - அபிடேகத்துக்குரிய, நீர் தன்னை-பொன்முகலி ஆற்றிலிருந்து கொண்டு வந்திருந்த நீரை. தன்: அசைநிலை. விளைத்த-விளையச் செய்த. அன்பு-பக்தியை. உமிழ்வார்போல-உமிழ்பவரைப் போல. விமலனார்-ஆணவம், சன்மம், மாயை என்னும் மூன்று: மலங்களிலிருந்து இயல்பாகவே நீங்கியுள்ள காளஹஸ்தீசு வரருடைய. 'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்' என்று நன்னூலில் வருவதைக் காண்க. முடிமேல்-திருமுடியின் மீது விட்டார்-உமிழ்ந்தார்.

அடுத்து உள்ள 124-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

தம்முடைய தலையின் GAು சுமந்து கொண்டு வந்திருந்த தி ரு ப் பள்ளித் தாமத் தை விசாலமாகிய காளஹஸ்தி மலையின்மேல் கோயில் கொண்டு எழுந்: