பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 209

தருளியிருக்கும் தம்முடைய தலைவராகிய காளஹஸ்தீசு வரருடைய திருமுடிமேல் வளைந்து கொண்டு அணிந்து தம்முடைய வில்லின்மேல் விளங்கிய செந்தாமரை மலரைப் போன்ற கையைப் பெற்ற திண்ணனார் கொண்டு வந்து வைத்த சருகிலைகளைத் தைத்த தொன்னைக்குள் வைத் திருந்த மாமிசமாகிய அழகிய உணவைக் காளஹஸ்தீசு வரருக்கு எதிரில் வைத்து விட்டு.” பாடல் வருமாறு:

தலைமிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங்கா

- ளத்தி மலைமிசைத் தம்பி ரானார் முடிமிசை வணங்கிச்

சாத்திச் சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார்

- சேர்த்த கல்லை இலைமிசைப் படைத்த ஊனின் திருவமு தெதிரே

.. வைத்து .' இந்தப் பாடல் குளகம். தலைமிசை-தம்முடைய தலை 'மயிரின் மேல்; ஆகுபெயர். ச் சந்தி. சுமந்த-சுமந்து கொண்டு வந்திருந்த மலர்கள் மிகுதியாக இருந் தமையால்; சுமந்த என்றார். "சாய்க் காட்டெம் பெருமாற்கே, பூநாளும் தலை சுமப்ப." என வருதலைக் காண்க. பூவொடு நீர்சுமந்தேத்தி." என வருவதையும் காண்க. பள்ளித் தாமத்தை-திருப்பள்ளி எழுச்சியின்போது அணியும் மாலையை. த், சந்தி. தடம் - விசாலமான, காளத்திமலை மிசை-காளஹஸ்தி மலையின் மீது திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். த், சந்தி. தம்தம்முடைய. பிரானார்-தலைவராகிய காளஹஸ்தீசு வரருடைய. முடிமிசை-திருமுடியின் மேல். வணங்கிதம்முடைய திருமேனியை வளைத்துக் கொண்டு. ச் சந்தி, சாத்தி-அணிந்து. ச்: சந்தி. சிலை மிசைதம்முடைய வில்லின் மேல். ப்: சந்தி. பொலிந்த-விளங்கிய, செம்-செந்தாமரை மலரைப் போலச் சிவந்த கை-திருக் கரத்தைப் பெற்ற த்: சந்தி. திண்ணனார் சேர்த்த

பெ.-4-14 r