பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் 17

பிறகு உள்ள 16-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு : - 'தங்களுடைய கால்களில் வீரக்கழல்களைக் கட்டிக் கொண்ட வீரர்களினுடைய பக்கங்களில் தங்களுடைய உடம்புகளுக்குள் அடக்கி வைத்த வாளாயுதங்கள் வீசும் ஒளி வட்டம் முன்பு ஒளிர வந்து இரண்டு பக்கங்களிலும் வந்து முந்திக் கொண்டார்கள்; வேலாயுதத்தோடு வேலாயுதம் எதிருக்கு எதிரில் நீண்டு மோதியது; இந்தக் காட்சி தாங்கள் இருந்த பாதாள உலகத்தை விட்டுவிட்டு உயரமாக உள்ள மண்ணுலகத்துக்கு வந்து சேரும் நாக லோக வீரர்களினுடைய நாக்குக்கள் நிமிர்ந்து விளங்குவன போலத் தோன்றின. பாடல் வருமாறு :

கால்கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின்

மெய்கள் அடக்கிய வான்ொளி வட்டம் முனைத்திட வந்திரு +

- கைகளின் முந்தினர், வேலொடு வேலெதிர் நீள்வன, மேவிய பாதலம் விட்டுயர் ஞாலமு றும்பணி வீரர்கள் காகிமிர் கின்றன. ஒத்தன.

கால்-தங்களுடைய கால்களில்; ஒருமை பன்மை மயக்கம். கழல்-வீரக்கமுல்களை ஒருமை பன்மை மயக்கம்; வெற்றிக் கழல்கள் என்பனவும் இவை. கட்டிய-கட்டிக் கொண்ட, மள்ளர்கள்-வீரர்களினுடைய. கைகளின்-பக்கங் களில். மெய்கள்-தங்களுடைய உடம்புகளுக்குள். அடக்கியஅடக்கி மறைத்து வைத்த, வாள்-வாளாயுதங்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஒளி வட்டம்-வீசும் பிரகாசத்தின், வட்டம். முனைத்திட - முன்னால் ஒளிர. வந்து - போர்க் களத்துக்கு வந்து. இரு-இரண்டு. கைகளின்-பக்கங்களிலும். முந்தினர்-முந்திக் கொண்டார்கள்: ஒருமை பன்மை மயக்கம். வேலொடு-வேலாயுதத்தோடு. வேல்-வேலாயுதம். எதிர்-எதிருக்கு எதிரில், நீள்வன-நீண்டு மோதியது; நீள்வது' என்பது நீள்வன என என்றது: விகாரம். மேவிய-இந்தக் காட்சி தாங்கள் இருந்த பாதலம்-பாதாள உலகத்தை. விட்டு-விட்டு விட்டு. உயர்-மேலே உள்ள. ஞாலம்-மண்ணுல

2 - Aسس . ماق)