பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 217

பிறகு உள்ள 131-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'சிவந்த நெருப்பினுடைய பிரகாசத்தைப் போல ஒளி பொங்கி எழும் பெரிய சோதி விருட்சங்களாலும், குரங்குகள் மலைக் குகையில் கொண்டு போய் வைத்த மாணிக்கங் களினுடைய விளக்கு வீசும் பிரகாசத்தைப் போன்ற, பிரகாசங்களாலும், மெய், வாய், கண்கள், மூக்கு, காதுகள் என்னும் ஐந்து இந்திரியங்களாலும் உணரப் படும் ஸ்பரிசம், ரஸம், ரூபம், கந்தம், சப்தம் என்னும் ஐந்தையும், காமம், குரோதம், லோபம், மதம், மோகம், மாச்சரியம் என்னும் ஆறு உட்பகைகளையும் அடக்கி இருக்கிறவர்களாகிய முனிவர்களுடைய திருமேனிகளி லிருந்து வீசும் அரிய பெரிய ஒளி வெள்ளத்தாலும் அடி. யேங்களுடைய தந்தையாரைப் போன்றவராகிய காளத்தி நாதர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அழகிய காளஹஸ்தி மலையில் இராத்திரி என்பது ஒன்று இல்லை. ஆகும். பாடல் வருமாறு: - x - , , .

செந் தழல் ஒளியிற் பொங்கும் தீபமா மரங்க ளாலும்

மந்திகள் முழையில் வைத்த மணிவிளக்

. - கொளிக ளாலும் ஐந்தும்ஆ றடக்கி யுள்ளார் அரும்பெரும் சோதி யாலும் எந்தையார் திருக்கா ளத்தி மலையினில் இரவொன் - -- * , றில்லை ."

செம்-சிவந்த தழல் - நெருப்பினுடைய. ஒளியின்பிரகாசத்தைப் போல. பொங்கும்-ஒளி பொங்கி எழும். தீபமா மரங்களாலும்-பெருமையைப் பெற்ற சோதி விருட். சங்களாலும். சோதி விருட்சம் என்பது அருகில் செல்பவர் களுக்குத் தோன்றாமல் தெய்வத் தன்மையைப் பெற்ற மலைகளிலும் தபோவனங்களிலும் இருப்பது, பகல் நேரத்தில் ஒருவருக்கும் தன்னுடைய ஒளியைக் காட்டாமல் இரவு நேரத்தில் தன் ஒளியைக் காட்டிச் சோதியாய் விளங்குவது. மந்திகள்-குரங்குகள். முழையில் - மலைக்