பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பெரிய புராண விளக்கம்-4

குகையில். வைத்த-கொண்டுபோய் வைத்த. மணி-மாணிக் கங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். விளக்கு-விளக்கு வீசும் பிரகாசத்தைப் போன்ற; ஆகுபெயர். ஒளிகளாலும்பிரகாசங்களாலும். ஐந்தும்-மெய், வாய், கண்கள், மூக்கு, செவிகள் என்பவற்றால் உணப்படும், ஸ்பரிசம், ரஸம், ரூபம், கந்தம், சப்தம், என்ற ஐந்தையும். ஆறு-காமம், குரோதம், லோபம், மோகம்,மதம், மாச்சரியம் என்னும் ஆறு உட்பகை களையும். அடக்கியுள்ளார் - அடக்கியிருப்பவர்களாகிய முனிவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். அரும்அருமையும். பெரும்-பெருமையும் பெற்ற, சோதியாலும்திருமேனியிலிருந்து வீசும் ஒளி வெள்ளத்தாலும். அந்த முனிவர்களை நெடுந்துாரத்திலிருந்து பார்த்தால் அவர் களுடைய திருமேனிகள் ஒளிவடிவமாகத் தோன்றும். எந்தையார் - அடியேங்களுடைய தந்தையாரைப் போல விளங்குபவராகிய காளத்திநாதர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும்; எந்தையார்' என்றது சேக்கிழார் தம்மையும் - திண்ணனாரையும் சேர்த்துச் சொன்னது. திரு-அழகிய. க், சந்தி. காளத்தி மலையினில்-காளஹஸ்தி மலையில். இரவு ஒன்று-இராத்திரி நேரம் என்ற ஒன்று. இல்லை-இல்லை ஆகும். - -

அடுத்து உள்ள 132-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

ஒவ்வொரு நாளும் வரும் கறுப்பு நிறம் உள்ள இரவு நேரம் அகன்று மேவிய நடு யாமம் போய்ச் சுருங்கி விடியற் காலம் வர, அதனை அறிந்த பறவைகளினுடைய சுற்றிக் கூவும் ஒலியைக் கேட்டு, கரிய நீரைப் பெற்ற சமுத்திரம் என்று கூறும் வண்ணம் நின்று கொண்டிருந்தவரும், தம்முடைய கண்களை மூடி உறங்காத வீரரும் ஆகிய திண்ணனார் அருமையாகப் பெறுவதற்குரிய தம்முடைய தலைவராகிய காளத்தி நாதருக்கு உணவைப் போய்க் கொண்டு வந்து சேர விரும்பிக் பாடல் வருமாறு: