பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 2.1%

வரும் கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்று சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ்சிலம் போசை கேட்டுக் கருங்கடல் என்ன கின்ற கண்துயி லாத வீரர் t அரும்பெறல் தம்பி ரானார்க் கமுதுகொண் டணைய

வேண்டி .' இந்தப் பாடல் குளகம். வரும்-ஒவ்வொரு நாளும் வரும். கறை-கறுப்புநிறம் உள்ள ப்: சந்தி. பொழுது-இரவு நேரம். நீங்கி-அகன்று. மல்கிய-பிறகு மேவிய. யாமம்-நடுச்சாமம்; நள்ளிரவு. சென்று-போய். சுருங்கிட - சுருங்கி விடியற் காலம் வர. அறிந்த-அதைத் தெரிந்து கொண்ட. புள்ளின்பறவைகளினுடைய ஒருமை பன்மை மயக்கம். அந்தப் பறவைகளாவன: காக்கை, சிட்டுக்குருவி, தூக்கணாங் குருவி, பருந்து, கழுகு, மீன்கொத்திப் பறவை, மைனா, மரங்கொத்திப் பரவை, கோழி, புறா முதலியவை. சூழ். சுற்றி. சிலம்பு-கூவும். ஒசைகேட்டு-ஒலியைக் கேட்டு. க் . சந்தி. கரும்-கரிய நீர் நிரம்பிய கடல்-சமுத்திரம். என்னஎன்று கூறுமாறு. நின்ற-நின்று கொண்டிருந்த. கண்தம்முடைய கண்களை; ஒருமை பன்மை மயக்கம். துயிலாதமூடி உறங்காத வீரர்-வீரராகிய திண்ணனார். அரும் பெறல்-அருமையாகப் பெறுவதற்குரிய, தம்-தம்முடைய. .பிரானார்க்கு-தலைவராகிய காளத்தி நாதருக்கு. அமுதுஉணவை. கொண்டு-போய்க்கொண்டு வந்து. அணையமீண்டும் காளத்தி மலைக்கு வந்து சேர, வேண்டி-விரும்பி.

கண் துயிலாத வீரர்: 'கருமுகிலென்ன நின்ற கண்படா வில்லியார்." (166) என்று இந்தப் புராணத்தில் பிறகு வருவதைக் காண்க. - - -

அடுத்து உள்ள 133-ஆம் பாட்டின் கருத்து வருமாறு: 'குட்டையான கால்களைக் கொண்ட காட்டுப்பன்றி யோடும் கரிய கலைமானும், தினைப்புனத்தில் மேயும் புள்ளி மானும், பிறவுமாக உள்ள வேறு வேறு விலங்குச் சாதிகளை வேட்டை புரிதலாகிய தொழிலில் காட்டும் தந்திரத்தினால் அந்த விலங்கினங்களுக்குத் துன்பத்தைப்