பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பெரிய புராண விளக்கம்-4

புரியும் காலத்தை எண்ணிப் பார்த்து வடிவம் நன்றாகத் தெரியாத சமயத்தில் பகைவர்களைக் கொல்லும் வில்லையும் எடுத்துக் கொண்டு வள்ளலாகிய காளத்தி நாதரை வணங்கி விட்டுத் திண்ணனார் சென்றார். பாடல் வருமாறு:

ஏறுகாற் பன்றி யோடும் இருங்கலை புன மான் மற்றும் வேறுவே றினங்கள் வேட்டை வினைத் தொழில் - - - - விரசினாலே: ஊறுசெய் காலம் சிந்தித் துருமிகத் தெரியாப் போதின் மாறடு சிலையும் கொண்டு வள்ளலைத் தொழுது

- போந்தார் . .

ஏறு-குட்டையான கால்-கால்களைப் பெற்ற : ஒருமை பன்மை மயக்கம், வயிற்றில் ஏறும் குறிய கால்களை உடைய காட்டுப்பன்றி. உடலுக்கு ஏற்ற கால்கள் இல்லாமை, யினால் ஏறுகால் என்றார். பன்றியோடும்-காட்டுப் பன்றியோடும். இரும்-கரிய, பெரிய' எனலும் ஆம். கலை-கலைமானும். புனம்-தினைப் புனத்தில் மேயும். மான்புள்ளிமானும். மற்றும்-பிறவுறமாக உள்ள வேறு வேறுவேறு வேறாகிய, இனங்கள்-விலங்குச் சாதிகளை. அவை: யாவன: புலி, கரடி, சிங்கம், வேங்கைப் புலி, ஒட்டகம், ஒநாய், நரி, காட்டுப் பசுமாடு, காட்டெருமை மாடு முதலி யவை. வேட்டை வினை-வேட்டை புரிதலாகிய, த், சந்தி. தொழில்-தொழிலில். விரசினால்-தந்திரத்தால்; சாமர்த்தி யத்தால். ஏ. அசை நிலை. ஊறுசெய்-அந்த விலங்கினங் களுக்குத்துன்பத்தைப் புரியும். காலம்-காலத்தை சிந்தித்துஎண்ணிப் பார்த்து. உரு-வடிவம். மிக-நன்றாக, த், சந்தி. தெரியா-அறிய முடியாத, ப். சந்தி. போதில்-சமயத்தில். மாறு-பகைவர்களை; திணை மயக்கம். அடு-கொல்லும். சிலையும்-வில்லையும். கொண்டு-தம்முடைய இடக்கையில் எடுத்துக் கொண்டு. வள்ளலை-வள்ளலாகிய காளத்தி நாதரை. த், சந்தி. தொழுது-வணங்கிவிட்டு. போந்தார்திண்ணனார் சென்றார். .