பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 - பெரிய புராண விளக்கம்

டைய கிரணங்களை ஒருமை பன்மை மயக்கம், காட்டிதோன்றச் செய்து. எழும்-வானத்தில் உதயமாகும். போதில் சமயத்தில். - -

பின்பு உள்ள 135-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'தமக்குக் கிடைத்த சீர்த்தியைப் பெற்ற சைவாகமத்தில் கூறப்பட்ட பூசைக்கு ஏற்றவாறு தாம் பறித்துக்கொண்டு வந்திருந்த மலர்களையும், பொன் முகலியாற்றிலிருந்து மொண்டு கொண்டு வந்திருந்த நீரையும், முதலாக உள்ள வேறு பொருள்களையும் எடுத்துக்கொண்டு மையைப் போன்ற கரிய நிறம் தழைத்து விளங்கும் திருக்கழுத்தைப் பெற்ற காளத்தி மலையில் கோயில் கொண்ட அமுதத்தைப் போன்றவராகிய காளத்தி நாதரை வழிபாடு புரிந்துவரும் தவத்தைப் பெற்ற அந்தணராகிய சிவகோசரியார் என்பவர் காளத்தி மலையை அடைந்தார். பாடல் வருமாறு:

எய்தியசீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக் கேற்பக் கொய்தமலரும்புனலும் முதலான கொண்ட ணைந்தார்,. மைதழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு செய்துவரும் தவமுடைய முனிவர்சிவ கோசரியார்.'

எய்திய-தமக்குக் கிடைத்த.சிர்-சீர்த்தியைப் பெற்ற.ஆக மத்தில்-சைவாகமத்தில். இயம்பிய விதித்துக் கூறப் பெற்ற. பூசனைக்கு-பூசைக்கு. ஏற்ப-ஏற்றவாறு. க்சந்தி. கொய்ததாம் நந்தவனத்தில் பறித்துக்கொண்டு வந்திருந்த மலரும்மலர்களும்; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: நந்தியாவட்டை, மல்லிகை மலர், முல்லை மலர், இருவாட்சி மலர், அரளிப் பூ, மகிழ மலர், கடம்ப மலர், வெட்சி மலர், கொன்றை மலர் முதலியவை. புனலும்-பொன் முகவியாற்றி லிருந்து மொண்டுகொண்டு வந்திருந்த நீரும். முதலான-முத வான பொருள்களை. அவையாவன: துபக்கால், கற்பூரத் தட்டு, சாம்பிராணி, கர்ப்பூரம், ஊதுவத்தி, அடிக்கும் மணி, நிவேதனப் பொருள் முதலியன.கொண்டு-எடுத்துக்கொண்டு. மை-மையைப் போன்ற கரிய நிறம். தழையும்-தழைத்து