பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 223:

விளங்கும். கண்டத்து-திருக்கழுத்தைப் பெற்ற மலைகாளத்தி மலையில் கோயில்கொண்ட மருந்தை-அமுதத் தைப் போன்றவரும் பிணிகளைப் போக்கும் மருந்தைப் போன்றவரும் ஆகிய காளத்தி நாதரை: உவம ஆகுபெயர், வழிபாடு செய்து வரும்-வழிபாட்டைப் புரிந்துவரும். தவம் உடைய தவத்தைப் பெற்ற, முனிவர்-அந்தணராகிய. சிவ கேர்சரியார் - சிவகோசரியார் என்பவர். அணைந்தார். காளத்தி மலையை அடைந்தார். - -

மருந்து:"சடையார் கழல் பரவி உருகும் மனம் உடை யார் தமக்குறுநோய் அடையாவே.', 'பிணிபடு கடல் பிறவி களை எளிது.', 'ஒடுங்கும் பிணி பிறவி கேடென்றிவை உடைத்தாய வாழக்கை ஒழியத்தவம், அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழற்கீழாளாம் வண்ணம்...

தொழுமின்களே.', 'பிணிநீர சாதல் பிறத்தல் இவை பிரியப் பிரியாத பேரின் பத்தோ, டணிநீர மேலுலகம் எய்த லுறில்,...தொழுமின்களே.', "ஊன்றும் பிணி பிறவி

கேடென்றிவை உடைத்தாய வாழ்க்கை ஒழிய ... தொழு மின்களே.', 'நோயும் பிணியும் அருந்துயரமும் நுகருடைய வாழ்க்கை ஒழிய,..தொழுமின்களே.', 'பகடூர் பசி நவிய நோய் வருதலாற் பழிப்பாய வாழ்க்கை ஒழிய,..தொழுமின் களே.', 'நீரார் சடையானை நித்தல் ஏத்துவார் தீரா நோயெல்லாம் தீர்தல் திண்ணமே.', 'தில்லைச் சிற்றம்புலம் ஏத்த மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.”, “அரனே என்றுகைப்பாடும் அடியார்க்குறு நோய் அடையாவே.', விடையா என்பாரை அறியா வினைகள் அருநோய் பாவம் அடையாவே.','மருந்தவன்.', செடிகொள் நோயின்னடை யார் திறம்பார் செறுதீவினை, கடிய சுற்றமும் கண்டக லும்...அடியார்கட்கே.', "செழுமாமறைப் பட்டன் சேவடியே பணிமின் பிணி போகவே.', 'எம்பிரான் எனக் கமுதமாவானும்.', 'பினியறியார்...சாய்க்காட்டெம்தவை வன்தாள் சார்ந்தாரே...', 'அடியார்மேல் தீவினைநோய் வாராமே அறம்கொண்ட சிவதன்மம் உரைத்த பிரான்.”,