பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.224 பெரிய புராண விளக்கம்-4

'தீவினைக்கோர் மருந்தா வான்.', 'விடையாய் என ஏத்தி அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா வருநோயே..', 'பேரா பிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.", "பணிவார் மேற் பெருக்கும் இன்பம் துன்பம் ஆனபிணி போமே.”, பரவி னாற் பற்றறும் அருநோயே.', 'இசைபாடி நின்றார்களைத் துன்பநோய் அடையாவே.', 'ஏத்தவல்லவர் மங்குநோய் பிணி மாயுமே.”, “பிணிவரினும் சீருடைக்கழலாற் சிந்தை செய்யேன்.', 'சிந்தை நோயவை தீர நல்கிடும்.', 'பெயர் ஏத்தும் மாந்தர் பிணிபேருமே.', 'கண்டு கைதொழுதலும் கவலை நோய் கழலுமே.', 'ஐயனை அடி பணிந்தரற்றுமின் அடர்தரும் வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே., "மழபாடியை உன்னிலங்க வுறுபிணி இல்லையே.', 'உடல் தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து மின்.'", "சடையீர் உமதினையடி உளம்கொள உறு பிணி யிலரே.', 'தொண்டர்கள் துயர்பிணி இலரே.', 'உம தொழுகழல் உற்றவர் உறுபிணி இலரே.', "எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே.”, உணருமின்கள் உறு நோய் அடையாவே.', 'வலஞ்சுழிவாணர் தம்மேல் உன் னிய சிந்தையின் நீங்ககில்லார்க் குயர்வாம் பிணிபோமே." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'மருந் தாகிப் பிணி தீர்க்கும் அணியான ஐயாரர்க்கு., 'மயக்கம் தீர்க்கும் மருந்தின்ை.', 'உற்றநோய் தீர்ப்பர் போலும்.’’, பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்.', 'ஒரு மருந் தாகி உள்ளாய் உம்பரோ டுலகுக்கெல்லாம் பெருமருந்தாகி நின்றாய்...வல்வினைகள் தீர்க்கும் அருமருந்தாலவாயில் அப் பான.', 'உற்ற நோய் வினை தீர்ப்பான்.', 'நோய் பிணி தீர்த்தாய்.", "பிதற்றுகின்றார் பிணிதீர்த்தருளாய்.", "பக்தர்கட்கமுதாய பரத்தினை', 'மருந்தினோடு நற்சுற்ற மும் மக்களும் பொருந்தி நின்றெனக் காயஎம் புண்ணி யன்.', 'உற்றவர்தம் உறுநோய்களைபவர்.', 'பொருந்து நோய் பிணிபோகத் துரப்பதோர் மருந்தும் ஆகுவர் மன்னு மாற்பேறரே.',"பிணித்தநோய்ப் பிறவிப் பிறிவையது மாறு 'னர்த்தலாம்.', 'மருந்து வானவர் தானவர்க்கு.", பிறப்பு