பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பெரிய புராண விளக்கம்-4

பன்மை மயக்கம். செருப்படியும்-செருப்புக்களினுடைய சுவடுகளையும்; ஒருமை பன்மை மயக்கம். நாய்-வேட்டை நாயினுடைய அடியும்-அடிகளினுடைய சுவடுகளையும்: ஒரும்ை பன்மை மயக்கம்; ஆகு பெயர். திரு-அழகிய. அலகால்-ஒரு துடைப்பத்தால். மாற்றிய-பெருக்கி அகற்றிய. பின்-பிறகு விருப்பினொடும்- விருப்பத்தோடும். திருஅழகிய முகலி-பொன் முகலியாற்றில் ஒடும். ப், சந்தி. புனல்-நீரில். மூழ்கி-மூழ்கிவிட்டு, விரைந்து-வேகமாக. அணைந்தார்-சிவகோசரியார் க | ள த் தி ம ன ல ைய அடைந்தார். - - -

அடுத்து உள்ள 139-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"தகாத செயல் நடந்ததை மாற்றுவதற்காகப் பரி சுத்தமாகும் புண்ணியாவாசனச் செயலைச் செய்து காளத்தி நாதரை வணங்கிப் பெறவேண்டிய பொருள்களை எடுத்துக் கொண்டு வந்து பரிசுத்தமாகிய பூசையை ஆரம் பித்துக் குற்றம் இல்லாத அபிடேகம் முதலாக உள்ள அங்கங்களோடு பூசை முழுவதையும் முறைப்படி செய்து நிறைவேற்றி முதல்வராகிய காளத்தி நாதருடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளைச் சிவகோசரியார் வணங்கி னார். பாடல் வருமாறு:

பழுதுபுகுந் தது.தீரப் பவித்திரமாம் செயல்புரிந்து தொழுதுபெறு வனகொண்டு தூயபூ சனை தொடங்கி வழுவில் திரு மஞ்சனமே முதலாக வரும்பூசை முழுதும்முறை மையின் முடித்து முதல்வனார்

கழல் பணிந்தார் .'

பழுது-தகாத செயல். புகுந்தது-நடந்ததை. திர்போக்குவதற்காக. ப்: சந்தி. பவித்திரமாம்-பரிசுத்தமாக இருக்கும். செயல் - புண்ணியாவாசனமாகிய செயலை. புரிந்து-செய்து விட்டு. தொழுது - காளத்தி நாதரை வணங்கி. பெறுவன-பெற வேண்டியவற்றை. அவையாவன: அபிடேகத் தீர்த்தம், எண்ணெய், பரிவட்டம், அணி