பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பெரிய புராண விளக்கம்-4

பணிக்தெழுந்து, தனிமுதலாம் பரன்' என்று

பன்முறையால் துணிந்தமறை மொழியாலே துதிசெய்து சுடர்த்திங்கள் அணிந்த சடை முடிக்கற்றை அங்கணரை விடை

கொண்டு தணிந்தமனத் திருமுனிவர் தபோவனத்தி னிடைச்

சார்ந்தார் .' பணிந்து-அவ்வாறு தரையில் விழுந்து காளத்தி நாதரை வணங்கிவிட்டு. எழுந்து-பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. தனி-ஒப்பற்ற, முதலாம்-முதல் வனாக விளங்கும்; திணை மயக்கம். பரன்-பரமேசுவரனே: விளி. என்று என பல்-பல. முறையால்-தடவைகளால்; ஒருமை பன்மை மயக்கம். துணிந்த-தாம் முறைப்படி அத்தியயனம் செய்து தெளிவை அடைந்திருந்த மறைஇருக்கு வேதம், யஜுர் வேதம், சாம் வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம், மொழியால்-மந்திரங்களால்; ஒருமை பன்மை மயக்கம். ஏ. அசைநிலை. துதி-தோத்திரம். செய்துபுரிந்து. சுடர்-ஒளியை வீசும், த், சந்தி, திங்கள் - பிறைச் சந்திரனை. அணிந்த-புனைந்த சடை முடிக்கற்றை-தொகுதி யாகிய சடாபாரத்தைப் பெற்ற திருமுடியையும். அங்கனர்ை-அழகிய கண்களையும் பெற்றவராகிய காளத்தி நாதரிடம்: உருபு மயக்கம். கணர் இடைக்குறை. கண்: ஒருமை பன்மை மயக்கம். விடைகொண்டு-விடைபெற்றுக் கொண்டு. தணிந்த-காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு உட்பகைகளும் குறைந்த. மன-திருவுள்ளத்தைப் பெற்ற, த், சந்தி. திரு-அழகிய. முனிவர்-அந்தணராகிய சிவகோசரியார். தபோவனத் தினிடை-தாம் தவம் புரியும் காட்டை; உருபு மயக்கம். சி: சந்தி. சார்ந்தார்-அடைந்தார்.

பிறகு வரும் 141-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'இவ்வாறு அந்தப் பெருமையைப் பெற்ற அந்தணராகிய சிவகோசரியார் தாம் தவம் புரியும் காட்டிற்குச் சென்றார்;