பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராண்ம் - 235

இனிமேல் இதன்பிறகு மையின் நிறத்தைப் பெற்ற கருமை யான தலை மயிரைக் கொண்ட காட்டு வேடர்களினுடைய தலைவராகிய திண்ணனார் தம்முடைய திருக்கரத்தில் அழகிய நிறத்தைக் கொண்ட வில்லை வளைத்து அம்புகளை எய்து காட்டில் விலங்குகளைத் தனியாக வேட்டையாடி அப்பால் புரிந்த அழகைப் பெற்ற செயல் திறத்தை இனிமேல் அடியேன் பாடுவேன்; அதனால் தீவினையாகிய பாவத்தின் வகையிலிருந்து அகலுவேன். பாடல் வருமாறு:

. இவ்வண்ணம் பெருமுனிவர் ஏகினார்: இனி இப்பால் மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமானார் கைவண்ணச் சிலைவளைத்துக் கான்வேட்டை

தனியாடிச் செய்வண்ணத் திறம்மொழிவேன்; தீவினையின் திறம்

- - - - ஒழிவேன்.'

இது சேக்கிழார் கூற்று. இவ்வண்ணம்-இவ்வாறு. பெருஅந்தப் பெருமையைப் பெற்ற, முனிவர்-அந்தணராகிய சிவகோசரியார். ஏகினார்-தாம் தவம் புரியும் காட்டிற்குச் சென்றார். இனி-இனிமேல். இப்பால்-இதன்பிறகு. மைமையைப் போன்ற, வண்ண-நிறத்தைக் கொண்ட க்: சந்தி. கரும் - கருமையான. குஞ்சி - தலை மயிரைப் பெற்ற. வனவேடர்-காட்டில் வாழும் வேடர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். பெருமானார் - தலைவராகிய திண்ண னார். கை-தம்முடைய திருக்கரத்தில். வண்ண-அழகிய நிறத்தைக் கொண்ட, ச் சந்தி. சிலை-வில்லை. வளைத்துவளைத்து அம்புகளை எய்து. ச் சந்தி. கான்-காட்டில். வேட்டை தனி ஆடி-விலங்குகளைத் தனியாக வேட்டையாடி. ச் சந்தி. செய்-அப்பால் புரிந்த, லண்ண-அழகைப் பெற்ற. த் சந்தி. திறம்-செயல் திறத்தை. மொழிவேன்-இனிமேல் அடியேன் பாடுவேன். தீவினையின்-அதனால் தீவினையாகிய பாவத்தின் திறம்-வகையிலிருந்து ஒழிவேன்-அகலுவேன்.