பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பெரிய புராண விளக்கம்.4

பிறகு உள்ள 142-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த அழகிய காளத்தி மலைக்கு வெளியில் எழுந் தருளிய திண்ணனார் அடர்ச்சியாக உள்ள சிறு பாறை. களுக்கும் பெரிய மலைகளுக்கும் நடுவிலுள்ள சரிவுகளில் பெரிய காட்டுப்பன்றிகள் தினைக் கொல்லையில் தினையை மேய்ந்துவிட்டு வருவனவற்றையும் வெட்டித் துண்டங் களாகச் செய்து மான்களின் கூட்டங்கள் காட்டிலிருந்து ஒரு வழியில் போய் ஏறுகின்ற நீர் நிலையினுடைய துறையில் ஒளிந்து நின்று கொண்டு அந்த மான் கூட்டங்களை

அம்புகளை எய்து கொலை செய்தருளி. பாடல் வருமாறு:

திருமலையின் புறம்போன திண்ணனார் செறிதுறுகல்

பெருமலைக ளிடைச்சரிவில் பெரும்பன்றி புனம்

மேய்ந்து வருவனவும் துணிபடுத்து மானினங்கள் கானிடைகின் றொருவழிச்சென் றேறுதுறை ஒளிகின்று

கொன்றருளி ,

இந்தப் பாடல் குளகம். திரு. அழகிய மலையின்காளத்தி மலைக்கு. புறம்-வெளியில். போன-எழுந்தருளிய, திண்ணனார் செறி-திண்ணனார் அடர்த்தியாக உள்ள துறுகல்-சிறிய பாறைகளுக்கும்; ஒருமை பன்ன்ம மயக்கம். பெரு-பெரிய, மலைகள் இடை-மலைகளுக்கும் நடுவில் உள்ள. ச்:சந்தி, சரிவில்-சரிவுகளில்; ஒருமை பன்மை மயக்கம். பெரும்-பெரிய பன்றி-காட்டுப் பன்றிகள்; ஒருமை பன்மை மயக்கம். புனம்-தினைக் கொல்லையில். மேய்ந்து-தினையை மேய்ந்து விட்டு. வருவனவும்-வருவனவற்றையும்; உம்மை எதிரது தழீஇய எச்ச உம்மை.துணி-துண்டங்களாக: ஒருமை பன்மை மயக்கம். படுத்து-வாளால் வெட்டி, மான்-மான் களின் ஒருமை பன்மை மயக்கம். இன்ங்கள்-கூட்டங்கள்;. வகைகள்' எனலும் ஆம். கானிடை நின்று-காட்டிலிருந்து. ஒருவழி - ஒருவழியில். ச்: சந்தி. சென்று-போய். ஏறுஏறுகின்ற. துறை-நீர்நிலையின் துறையில், ஒளிநின்று