பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பெரிய புராண விளக்கம்-4

இடத்தில். கிடை-அம்புகள் கிட்டிப் பாயும்படி, எய்துஎய்து கொலை செய்தும். தொடர்ந்து-மேலும் தொடர்ந்து. கடமைகள்-கடமைகள் என்னும் விலங்குகளை. எய்துஅம்புகளை எய்து கொன்று வீழ்த்தியும். வெயில்-வெயிலை. படு-உண்டாக்கும். வெம்-கொடுமையான வெப்பத்தைப் பெற்ற. கதிர்-சூரியன். முதிர உச்சியை அடைய. த், சந்தி. தனி-தனியாகப் புரிந்த வேட்டை-வேட்டையாகிய, வினைதொழிலை. முடித்தார்-முடித்துக் கொண்டார்.

பிறகு வரும் 144-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

இறந்து போன காட்டு மிருகங்கள் எல்லாவற்றையும் பரவியுள்ள காட்டில் ஓரிடத்தில் வைத்து விட்டு, பக்கத்தில் தீக்கடை கோலினால் நெருப்பை உண்டாக்கி, பெரிய உடைவாளைத் தம்முடைய இடுப்பிலிருந்து உருவி எடுத்து அந்த மிருகங்களினுடைய உடம்புகளை அந்த வாளால் வெட்டி நறுமணம் கமழும் கொம்புத் தேனையும் மிகுதி யாகத் தேனடைகளிலிருந்து முறித்துக் கொண்டு வந்து தேக்க மரத்தின் இலைகளால் வட்டமாக உள்ள பெரிய தொன்னைகளை பக்கத்தில் பக்கத்தில் இருக்கும்படி வைத்து அந்தத் தொன்னைகளில் தேனை நிரப்பித் திண்ணனார் வைத்துக் கொண்டார். பாடல் வருமாறு: பட்டவன விலங்கெல்லாம் படர்வனத்தில் ஒருசூழல் இட்டருகு தீக்கடைகோல் இருஞ்சுரிகை தனைஉருவி வெட்டிறுேம் கோற்றேனும் மிகமுறித்துத்

- தேக்கிலையால் வட்டமுறு பெருங்கல்லை மருங்குபுடை

படஅமைத்தார்.'

பட்ட -இறந்துபோன வன-காட்டில் வாழும். விலங்குமிருகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லா வற்றையும். படர்-பரவியுள்ள. வனத்தில்-காட்டில் உள்ள. ஒரு சூழல்-ஓரிடத்தில் இட்டு-வைத்து விட்டு. அருகு-பக்கத் தில். தீக்கடைகோல்-நெருப்பைக் கடைந்து உண்டாக்கும்