பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 239.

கோலால் நெருப்பை உண்டாக்கி. இரும்-பெரிய சுரிகை தனை-உடைவாளை. தன்: அசை நிலை. உருவி-தம்முடைய இடுப்பிலிருந்து உருவி எடுத்து. வெட்டி-அந்த விலங்குகளி னுடைய உடம்புகளை அந்த வாளால் வெட்டி, நறும்-நறு மணம் கமழும். கோல் தேனும்-கொம்புத் தேனையும். மிக-மிகுதியாக. முறித்து-தேனடைகளிலிருந்து முறித்துக் கொண்டு வந்து. த், சந்தி, தேக்கு-தேக்க மரத்தினுடைய. இலையால்-இலைகளால்: ஒருமை பன்மை மயக்கம். வட்டம் உறு-வட்டமான வடிவத்தைப் பெற்றிருக்கும். பெரும். பெரிய. கல்லை-தொன்னைகளை ஒருமை பன்மை மயக்கம். மருங்கு-பக்கத்தில். புடை-பக்கத்தில். பட-இருக்கும்படி வைத்து அந்தத் தொன்னைகளில் தேனை நிரப்பி. அமைத்தார்-திண்ணனார் வைத்துக் கொண்ட்ார்.

பிறகு உள்ள 145-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

விறகுக் கட்டைகளை முறித்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நெருப்பைக் கடையும் அரணிக் கட்டையில் வெப்பமான நெருப்பைக் கடைந்து உண்டாக்கி மிகுதியாகக் கொழுந்து விட்டு எரியும் வண்ணம் வளர்த்துத் தாம் கொன்ற விலங்குகளின் உடம்புகளைக் கொத்திக் கூர்மையான நுனியை உடைய அம்பினால் குடைந்து குழியை உண்டாக்கிக் கொழுப்பை வாளால் அரிந்து கொண்டு அவ்வாறு வந்தவற்றை எடுத்துக் கொண்டு எழுந்து எரியும் நெருப்பில் வதக்க வேண்டியவற்றை வதக்கி." பாடல் வருமாறு:

இந்தனத்தை முறித்தடுக்கி எரிகடையும் அரணியினில் வெங் த ழலைப் பிறப்பித்து மிகவளர்த்து மிருகங்கள் கொங்திஅயில் அலகம்பால் குட்டமிட்டுக் - - கொழுப்பரிந்து வந்தனகொண் டெழும் தழலில் வக்குவன

- % வக்குவித்து .' இந்தப் பாடல் குளகம். இந்தனத்தை விறகுக் கட்டைகளை ஒருமை பன்மை மயக்கம். முறித்து-ஒடித்து.