பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் .243

நல்ல பதம்-நல்ல பக்குவம். உற-உண்டாகுமாறு. வெந்து - நெருப்பில் வெந்து. நாவின்கண் - தம்முடைய நாக்கில். இடும்-வைக்கும். இறைச்சி-மாமிசங்கள்: ஒருமை பன்மை மயக்கம். கல்லையினில்-ஒரு தொன்னைக்குள். படைத்து-வைத்து. த், சந்தி. தேன்-அவற்றின் மேல் தேனை, பிழிந்து-தாம் கொண்டு வந்திருந்த தேனடையிலிருந்து பிழிந்து. கலந்து அது-கலந்து அவ்வாறு கலந்த மாமி சங்களை, அது: ஒருமை பன்மை மயக்கம். கொண்டுஎடுத்துக் கொண்டு. வல்-மிக விரைந்து-வேகமாகச் சென்று. திருப்பள்ளித் தாமமும் - திருப்பள்ளி எழுச்சியின்போது காளத்தி நாதருக்கு அணியும் மாலையையும். தூய்-தூய்மை யான, மஞ்சனமும்-பொன்முகலி யாற்றிலிருந்து கொண்டு வந்த அபிடேக நீரையும். ஒல்லையினில்-விரைவில். முன்பு போல்-முன்பு செய்ததைப் போல. உடன்-தம்மோடு, கொண்டு-எடுத்துக் கொண்டு. வந்து அணைந்தார். திண்ணனார் காளத்தி மலைக்கு வந்து சேர்ந்தார்.

அடுத்து உள்ள 149-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அவ்வாறு வந்து அழகிய காளத்தி மலையின் மேல் ஏறி காட்டில் வாழும் வேடர்களுடைய தலைவராகிய திண்ணனார் தேவர்களினுடைய தலைவராகிய காளத்தி நாதரை அடைந்து பிராமணராகிய சிவகோசரியார் புரிந்த பூசையில் அருச்சனை செய்த மலர்களையும் வில்வம் முதலிய பத்திரங்களையும் காளத்தி நாதராகிய சிவலிங்கப் பெருமானாருடைய தலையிலிருந்து முன்பு செய்ததைப் போலத் தள்ளிப் போக்கிய பிறகு முன்பு புரிந்த முறைப்படி தம்முடைய பூசையாகிய செயலைச் செய்து முடிப்ப வரானார். பாடல் வருமாறு: . .

வந்துதிருக் காளத்தி மலைஏறி வனசரர்கள் தம் தலைவ னார் இமையோர் தலைவனார் தமைஎய்தி அந்தணனார் பூசையினை முன்புபோல் அகற்றியபின் முந்தைமுறை தம்முடைய பூசனையின் செயல்

முடிப்பார் ."