பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 - பெரிய புராண விளக்கம்-கி

  • இப்பரிசு திருவமுது செய்வித்துத் தம்முடைய

ஒப்பரிய பூசனைசெய் தந்நெறியில் ஒழுகுவார் எப்பொழுதும் மேன்மேல்வங் தெழும்.அன்பால் காளத்தி அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல்வேட்டை ஆடுவார் ."

இப்பரிசு-இந்த முறையில் திண்ணனார். திருவமுதுதிருவமுதை செய்வித்து-காளத்தி நாதருக்குப் படைத்து உண்ணச் செய்து. த், சந்தி. தம்முடைய ஒப்பரிய-ஒப்புக் கூறுவதற்கு அருமையாகிய தம்முடைய பூசனை-பூசையை. செய்து-புரிந்து. அந்நெறியில்-அந்த வழியில். ஒழுகுவார்நடப்பவராகிய அவர். எப்பொழுதும்-எந்த வேலையிலும். மேன்மேல்-மேலும் மேலும். வந்து எழும்-தம்முடைய' திருவுள்ளத்தில் தோன்றி எழும். அன்பால்-பக்தியினால். காளத்தி அப்பர்-காளத்தி அப்பருக்கு. எதிர்-எதிரில் இருந்து கொண்டு. அல்-இரவு நேரங்களில்: ஒருமை பன்மை மயக்கம்: உறங்கார்-துயில மாட்டார். பகல்-பகல் நேரங்' களில்; ஒருமை பன்மை மயக்கம். வேட்டை ஆடுவார்காளத்தி மலையிலிருந்து இறங்கி வந்து காட்டுக்குச் சென் விலங்குகளை வேட்டை ஆடுவார். - , ...:

அடுத்து வரும் 152-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: - -

'பெருமையைப் பெற்ற அந்தணராகிய சிவகோசரியார் ஒவ்வொரு நாளும் காளத்தி மலைக்கு வந்து சேர்ந்து காட்டில் உள்ள வேடர்களுக்கு அரசராகிய திண்ணனார் புரியும் பூசைக்கு மிக மிகவும் தளர்ச்சியை அடைந்து இவை, கெட்டவை என்று எண்ணித் திண்ணனார் பூசை செய்த நிர்மாவியங்களைத் தள்ளிவிட்டுக் சைவாகமம் கூறிய விதியோடு ஆகும் முறையில் காளத்தி நாதருக்கு அருச் சனையைப் புரிந்து அந்த வழியில் நடப்பவர்ானார். பாடல் வருமாறு -

மாமுனிவர் நாடோறும் வந்தணைந்து வனவேந்தர்

தாம்முயலும் பூசனைக்குச் சாலமிகத் தளர்வெய்தித்