பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 247

தீமைஎன அதுநீக்கிச் செப்பிய ஆகமவிதியால் ஆம்முறையில் அர்ச்சனைசெய் தந்நெறிபில்

- ஒழுகுவரால் .'

மா-பெருமையைப் பெற்ற, முனிவர்-அந்தணராகிய சிவ கோசரியார். நாடோறும்-ஒவ்வொரு நாளும். வந்துகாளத்தி மலைக்கு வந்து. அணைந்து-சேர்ந்து. வனகாட்டில் வாழும். வேந்தர் - வேடர்களுக்கு அரசராகிய திண்ணனார். முயலும்-புரியும். பூசனைக்கு-பூசைக்கு. ச் சந்தி. சால-மிக மிக-மிகவும். த், சந்தி. தளர்வுதளர்ச்சியை. எய்தி-அடைந்து. த்: சந்தி. தீமை-இவை கெட்ட பான்மையை உடையவை. என-என்று எண்ணி; இடைக்குறை. அது-திண்ணனார் பூசை செய்த அந்த நிர் மாலியங்களை ஒருமை பன்மை மயக்கம். நீக்கி-தள்ளி விட்டு. ச்: சந்தி. செப்பிய ஆகம விதியால்-சைவாகமம் கூறிய விதியோடு; உருபு மயக்கம். ஆம்-ஆகும். முறையில்முறைமையில். அர்ச்சனை-காளத்தி நாதருக்கு அருச் சனையை. செய்து-புரிந்து. அந்நெறியில்-அந்த வழியில், ஒழுகுவர்-நடப்பவரானார். ஆல்: ஈற்றசை நிலை.

பிறகு உள்ள 153-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

நாணன் என்னும் வேடனோடு காடன் என்னும் வேடன் சென்று திண்ணனாருடைய தந்தையாகிய நாக்னுக்குத் திண்ணனாருடைய நிலையை எடுத்துக் கூறிய பிறகு அந்த நாகன் உணவும் துயிலும் இல்லாமல் தெய்வ ஆவேசம் வரும் தன்மையைப் பெற்ற தேவராட்டியையும் அழைத்துக் கொண்டு தான் விரும்பும் தன்னுடைய புதல்வ ராகிய திண்ணனாரிடத்தில் வந்து அவர் மேற்கொண்ட நிலைகள் எல்லாவற்றையும் தங்களுடைய சாதிக்கு மாறு பாடாக இருப்பதைத் தெரிந்து கொள்ளும் வழியில் கூறியும் அந்தத் திண்ணனார் தங்களுடைய எண்ணத் தின்படி வாராமல் இருந்ததனால் மேற்கொண்டு எதையும் செய்யாமல் அந்த வேடர்கள் விட்டு விட்டார்கள் பாடல் வருமாறு: - -