பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24& பெரிய புராண விளக்கம்4.

காணனொடு காடனும்ப்ோய் நாகனுக்குச் சொல்லியபின் ஊணும்.உறக் கமும் இன்றி அணங்குறைவாளையும் . . . கொண்டு

பேணுமக னார்தம்பால் வந்தெல்லாம் பேதித்துக் காணுநெறி தங்கள்குறி வாராமல் கைவிட்டார் .' நாணனொடு-நாணன் என்னும் வேடனோடு, காடனும்காடன் என்னும் வேடனும். போய்-சென்று. நாகனுக்குதிண்ணனாருடைய தந்தையாகிய நாகனுக்கு. ச்: சந்தி. சொல்லிய - திண்ணனாருடைய நிலையை எடுத்துக் கூறிய. பின்-பிறகு. ஊணும்-அந்த நாகன் உணவும். உறக்கமும்துயிலும். இன்றி-இல்லாமல், அணங்கு உறைவாளையும்தெய்வ ஆவேசம் வரும் தன்மையைப் பெற்ற தேவராட்டி யையும். கொண்டு - தன்னோடு அழைத்துக் கொண்டு. பேணும்-தான் விரும்பும்; தான் பாதுகாக்கும் எனலும் ஆம். மகனார் தம்பால்-தன்னுடைய புதல்வராகிய திண்ண னாரிடத்திற்கு. தம்: அசை நிலை. வந்து-நாகன் வந்து, எல்லாம்.அவர் மேற்கொண்ட நிலைகள் எல்லாவற்றையும். பேதித்து-தங்களுடைய சாதிக்கு மாறுபாடாக இருப்பதைத் தெரிந்து கொள்ளும் வழியில் கூறி அவருடைய எண்ணத்தை மாற்ற முயன்றும். க், சந்தி. காணும்-அந்தத் திண்ணனார் தான் கூறியதைத் தெரிந்து கொள்ளும். நெறி-வழிக்கு. தங்கள்-தங்களுடைய. குறி-எண்ணத்தின்படி. வாராமல்வாராமல் இருந்ததனால். கைவிட்டார்-மேற்கொண்டு எந்த முயற்சியையும் செய்யாமல் விட்டு விட்டார்கள்: ஒருமை பன்மை மயூக்கம். - .

பின்பு வரும் 154-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

திண்ணனார் முன்னால் அழகிய காளத்தி மலையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் முதல்வராகிய காளத்தி நாதர் வழங்கிய திருவருட் பார்வையால் இன்பத்தை உண்டாக்கும் ரசவாதத்தில் இரும்பு என்னும் உலோகம் தங்கமாக மாறியதைப் போலத் தம்முடைய திருமேனியினுடைய இயல்பும், புண்ணியம் பாவம் என்னும்