பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் . 85芷,

பிறகு வரும் 156-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'அன்றைக்கு இராத்திரியில் சொப்பனத்தில் தம்முடைய திருவருளைப் .ெ ப ற் ற அந்தணராகிய சிவகோசரி யாரிடத்தில் மின்னலைப் போல விளங்கும் சடாபாரத்தைத் தம்முடைய திருமுடியின் மேற்கொண்ட அந்தணராகிய காளத்தி நாதர் எழுந்தருளி வந்து, "வலிமையையும் ஆற்ற ல்ையும் பெற்ற வேடன் என்று அந்தத் திண்ணனை நீ எண்ணாதே; அவனுடைய செயலை நன்றாக யாம் கூறக் கேட்பாயாக' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. பாடல் வருமாறு: .

  • அன்றிரவு கனவிண்கண் அருள்முனிவர் தம்பாலே மின்திகழும் சடைமவுலி வேதியர்தாம் எழுந்தருளி வன்திறல்வே டுவன் என்று மற்றவனை நீகினையேல்; கன்றவன்தன் செயல்தன்னை நாம்உரைப்பக் கேள்."

-- . என்று .”

இந்தப் பாடலும் குளகம். அன்று-அன்றைக்கு. இரவுஇராத்திரியில். கனவின்கண்-சொப்பனத்தில். அருள்தம்முடைய திருவருளைப் பெற்ற முனிவர் தம்பால்அந்தணராகிய சிவகோசரியாரிடத்தில், தம்: அசை நிலை. ஏ: அசைநிலை. மின்-மின்னலைப் போல. திகழும்-விளங்கும். சடை-சடாபாரத்தையுடைய மவுலி-திருமுடியைப் பெற்ற. வேதியர் தாம்-அந்தணராகிய காளத்தி நாதர், தாம்: அசை நிலை. எழுந்தருளி-எழுந்தருளி வந்து. வன்-வலிமையையும். திறல்-ஆற்றலையும் பெற்ற, வேடுவன்-வேடன். என்று-என. மற்று: அசை நிலை. அவனை-அந்தத் திண்ணனை. நீ நினை யேல்-நீ எண்ணாதே. அவன்தன்-அவனுடைய. தன்: அசை நிலை, செயல் தன்னை-செயலை. தன்: அசை நிலை. நன்றுநன்றாக. நாம்-யாம். உரைப்ப்-உனக்குக் கூற. க்: சந்தி. கேள்-நீ கேட்பாயாக. என்று-எனத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. - - - -