பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பெரிய புராண விளக்கம்-4

பிறகு வரும் 157-ஆம் பாடலின் கருத்து வருமாறு:


அந்தத் திண்ணனுடைய திருவுருவம் எல்லாம் எல்லாக் காலத்திலும் நம்மிடத்தில் கொண்ட பக்தியே; அவனுடைய அறிவு முழுவதும் நம்மைத் தெரிந்து கொள்ளும் அறிவே. எல்லாக் காலத்திலும் அவனுடைய செய்கைகள் யாவும் நமக்கு இனியவை ஆகும்; எல்லாக் காலத்திலும் அவனுடைய நிலை இவ்வண்ணம் இருப்பதே; இதனை நீ தெரிந்து கொள்வாயாக." என்று காளத்திநாதர் சிவகோசரியாருக்குத் திருவாய் மலர்ந்தருளிச் செய்வாரானார். பாடல் வருமாறு:


அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலைஇவ்வா றறிநீ என்றருள்செய்வார்.



அவனுடைய-அந்தத் திண்ணனுடைய வடிவு-திரு வுருவம், எல்லாம்-முழுவதும். நம்பக்கல்-எம்மிடத்தில். அன்பு-வைத்திருக்கும் பக்தியே. என்றும்.எக்காலத்திலும். அவனுடைய-அந்த வேடனுடைய. அறிவு எல்லாம்-அறிவு அனைத்தும். நமை-நம்மை; இடைக்குறை. அறியும்தெரிந்து கொள்ளும். அறிவு-அறிவேயாகும். என்றும்எப்போதும். அவனுடைய-அந்தப் பக்தனுடைய செயல். செய்கைகள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-யாவும். 'நமக்கு-எமக்கு. இனிய - இ னி ய வை. ஆம் ஆகும். என்றும்-எந்தக் காலத்திலும். அவனுடைய-அந்த வேட்டு வனுடைய நிலை-உண்மையான நிலைமை. இவ்வாறுஇவ்வண்ணம் இருப்பது. அறிநீ-இதனை நீ.தெரிந்து கொள் வாயாக. என்று என். அருள்செய்வார்-காளத்திநாதர் .சிவகோசரியாரிடம் கனவில் திருவாய் மலர்ந்தருளிச் செய்வாரானார்.