பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார். புராணம் 253.

அடுத்து உள்ள 158-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

இந்தக் காளத்தி மலைக்கு வந்து அந்தத் திண்ணன் புரியும் பூசைக்கு முன்னால் என்மேல் சிவகோசரியார் முன்பு. அருச்சனை செய்த அரும்புகளோடு மென்மையான மலர் களும் ஆகிய அவற்றைத் தள்ளிவிடும் பேராவலால் விருப் பத்தைப் பெறும் பக்தியென்னும் வெள்ளத்தையுடைய கால்வாய் பெருகிவந்தது என்று கூறுமாறு என்மேல் படிந்த, அவனுடைய செருப்பை அணிந்த திருவடி அந்த இளமைப் பருவத்தைக் கொண்ட முருகனுடைய திருவடியை விடச் சிறப்பைப் பெற்றது. பாடல் வருமாறு:

  • பொருப்பினில்வந் தவன்செய்யும் பூசனைக்கு

• , முன்பென்மேல். அருப்புறுமென் மலர் முன்னை அவைநீக்கும் ஆதரவால் விருப்புறும்அன் பெனும்வெள்ளக் கால்பெருகிற் -

. . .” - றெனவீழ்ந்த, செருப்படி அவ் விளம்பருவச் சேயடியிற் -

- சிறப்புடைத்தால் .”

இந்தப் பாடலும் காளத்திநாதர் சிவகோசரியாரிடம் -கனவில் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தருளியதைக் கூறுவது. பொருப்பினில்-இந்தக் காளத்தி மலைக்கு உருபு மயக்கம். வந்து அவன்-அந்தத் திண்ணன். செய்யும் - புரியும். பூசனைக்கு-பூசைக்கு முன்பு - முன்னால். என்மேல்என்னுடைய தலையின் மேல். முன்னை-முன்பு சிவ கோசரியார் செய்த அருச்சனையில் போட்ட அருப்புஅரும்புகள்: ஒருமை பன்மை மயக்கம். உறு-அடைந்த

மென்-மென்மையான. மலர்-மலர்கள்; ஒருமை பன்மை, மயக்கம். அவை-ஆகிய அவற்றை நீக்கும்-தள்ளும். ஆதரவில் பேராவலால். விருப்புறும் - விருப்பத்தை அடையும். அன்பு-பக்தி எனும்-என்று கூறப்பெறும்; இடைக்குற்ை. வெள்ள-வெள்ளத்தை உடைய, க்: சந்தி. கால்-கால்வாய். பெருகிற்று.பெருகி வந்தது. என-என்று