பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

з6о பெரிய புரான விளக்கம்-4

மலர்களும் அந்தத் திண்ணன் தன்னுடைய தலையிலிருந்து என்மேல் போடும் மலரைப் போல எனக்கு ஒத்து இரா.' 4.ாடல் வருமாறு: -

  • இம்மலைவங் தெனை அடைந்த கானவன்தன்

- - - - இயல்பாலே மெய்ம்மலரும் அன்புமேல் வீழ்ந்தனபோல் விழுதலால் செம்மலர்மேல் அயனொடு மால் முதல்தேவர் -

- .* - வந்துபுனை எம்மலரும் அவன்தலையால இடும்மலர்போல்

!. எனக் கொவ்வா .'

இந்தப் பாடலும் காளத்திநாதர் சிவகோசரியாருடைய கனவில் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தருளிச் செய்ததைக் கறுவது. இம்மலை-இந்தக் காளத்தி மலைக்கு. வந்து எனை-வந்து என்னை. எனை: இடைக்குறை. அடைந்தசேர்ந்த கானவன் - வேடனாகிய திண்ணன், தன்தன்னுடைய இயல்பால்-இயற்கையான தன்மையினால். ஏ: அசை நிலை. மெய்-உண்மையான, ம்: சந்தி. மலரும்என்மேல் போடுகிற மலர்களும்; ஒருமை பன்மை மியக்கம். அன்பு-அவனுடைய பக்தி. மேல்-என்மேல். வீழ்ந்தன போல்விழுந்தவற்றைப் போல. விழுதலால்-விழுவதால். செம் மலர்மேல்-செந்தாமரை மேல் வீற்றிருக்கும். அயனொடுபிரம தேவனோடு. மால்-திருமால். முதல்-முதலிய. தேவர். தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வந்து-இங்கே வந்து. புனை-என்மேல் அணியும். எம்மலரும்-எந்த மலர்களும்; ஒருமை பன்மை மயக்கம். அவன்-அந்தத் திண்ணன். தலையால்-தன்னுடைய தலையிலிருந்து உருபு மயக்கம். இடும்-என்மேல் விழச் செய்யும். மலர்போல்-மலர்களைப் போல: ஒருமை பன்மை மயக்கம். எனக்கு ஒவ்வா-எனக்கு ஒத்து இரா. - -

அடுத்து வரும் 161-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

வெப்பமான நெருப்பில் பக்குவத்தை அடையும் வண்ணம் நன்றாக இந்த மாமிசம் வெந்திருக்கிறதா