பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார்.புராணம் - 26E

என்று பார்க்கும் அன்போடு உருகுகின்ற அவனுடைய உள்ளத்தில் உள்ள இனிமையினால் குழையும்படி அதைத் தன்னுடைய வாயில் இட்டு நன்றாக மென்று பார்த்து விட்டு எனக்குப் படைப்பதனால் புரிகின்ற வேத விதிப்படி யாகத்தைப் புரியும் அந்தணர்கள் முன்பு உள்ள யாகாக் கினியில் சமர்ப்பிக்கும் திருத்தமாக உள்ள ஹவிலைக் காட்டிலும் எய்கின்ற வரிந்து கட்டப் பெற்ற வில்லை. ஏந்திய அந்தத் திண்ணன் எனக்குப் படைத்த மாமிசங்கள் எனக்கு இனிய சுவையை உடையனவாய் இருக்கின்றன.' பாடல் வருமாறு: ' -

வெய்ய கனற் பதம்கொள்ள வெந்துளதோ எனும்

. அன்பால் நையுமனத் திணிமையினில் நையமிக மென்றிடலால் செய்யும்மறை வேள் வியோர் முன்புதரும் திருந்தவியில் எய்யும்வரிச் சிலையவன்தான் இட்டஊன்

- எனக்கினிய .' இந்தப் பாடலும் காளத்திநாதர் சிவ கோ சரி யாருடைய கனவில் எழுந்தருளித் திருவாய் மலர்ந் தருளிச் செய்ததைக் கூறுவது. வெய்ய - வெப்ப மாக உள்ள கனல் - நெருப்பில். பதம் - பக்குவத்தை. கொள்ள-பெறும் வண்ணம். வெந்துளதோ-இந்த மாமிசம் நன்றாக வெந்திருக்கிறதா. உளதோ: இடைக்குறை. எனும் - என்று பார்க்கும்; இடைக்குறை. அன்பால் -அன்போடு; உருபு மயக்கம். நையும் - உருக்கத்தை அடையும். மனத்து-திண்ணனுடைய உள்ளத்தில் உள்ள. இனிமையினில்-இனிமையால்; உருபு மயக்கம். நையகுழையும்படி. மிக-நன்றாக. மென்று-தன்னுடைய வாயில் இட்டு மென்று பார்த்து. இடலால்-எனக்குப் படைப்ப தனால். செய்யும்-புரியும், மறை-வேதம் விதித்த முறைப்படி. வேள்வியோர்-யாகத்தைப் புரியும் அந்தணர்கள்: ஒருமை பன்மை மயக்கம். முன்பு-தங்களுக்கு முன்பு உள்ள யாகாக்கினியில்: ஆகுபெயர். தரும்-வழங்கும். திருந்து