பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பெரிய புராண விளக்கம்-4

திருத்தமாக உள்ள. அவியில்-ஹவிலைக் காட்டிலும். எய்யும் அம்புகளை எய்யும். வரி-வரிந்து கட்டப் பெற்ற. ச்: சந்தி. சிலையவன்தான்-வில்லை ஏந்திய திண்னன். தான்: அசைநிலை. இட்ட-எனக்குப் படைத்தி. ஊன்-மாமி சங்கள்: ஒருமை பன்மை மயக்கம். எனக்கு இனிய எனக்கு

இனிமையான சுவையை உடையவையாக இருக்கின்றன.

பிறகு உள்ள 162-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'நிலைபெற்று விளங்கும் பெருமையைக் கொண்ட வேத மந்திரங்களைப் பெருமையைப் பெற்ற முனிவர்கள் மகிழ்ச்சியை அடைந்து இயம்பும் இன்பத்தைப் பெற்ற சொற்களைக் கொண்ட தோத்திரங்களும் மந்திரங்களும் ஆகிய எவற்றைக் காட்டிலும் எனக்கு முன்னால் இருந்து கொண்டு அந்தத் திண்ணன் தன்னுடைய முகம் மலர்ச்சி யைப் பெற உள்ளம் நெகிழ்ச்சியை அடைய, பக்தியோடு எண்ணி என்னை அல்லாமல் வேறு எதையும் தெரிந்து கொள்ளாத அவன் கூறும் வார்த்தைகள் எனக்கு நல்லவை யாக இருக்கின்றன. பாடல் வருமாறு:

மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர்

. . . . மகிழ்ந்து ரைக்கும்

இன்பமொழித் தோத்திரங்கள் மந்திரங்க ளியாவை

- -- யினும் முன்பிருந்து மற்றவன்தன் முகம்மலர அகம் கெகிழ - அன்பில்கினைங் தெனையல்லால் அறிவுறா t

- மொழி கல்ல 'இந்தப் பாடலும் காளத்தி நாதர் சிவகோசரி யாருடைய கனவில் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தருளிச் செய்ததைக் கூறுவது. மன்-நிலைபெற்று விளங்கும். பெருமா-மிக்க பெருமையைக் கொண்ட மறை.வேதங்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம், மொழிகள்-மந்திரங். களை. மா-பெருமையைப் பெற்ற. முனிவர்-முனிவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அந்தணர்கள்' எனலும்