பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 263

ஆம். மகிழ்ந்து - மகிழ்ச்சியை அடைந்து. உரைக்கும்இயம்பும். இன்ப-இன்பத்தைத் தரும். மொழி-வார்த்தை களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். த், சந்தி. தோத்திரங்கள்-துதிகளும். மந்திரங்கள் - மந்திரங்களும். இ. குற்றியலிகரம். யாவையினும் - ஆகிய எவற்றைக் காட்டிலும். முன்பு-எனக்கு முன்னால் இருந்து-இருந்து கொண்டு. மற்று: அசை நிலை. அவன்-அந்தத் திண்ணன். தன்-தன்னுடைய. முகம்-வதனம்.மலர-மலர்ச்சியோடு விளங் கவும். அகம்-தன்னுடைய உள்ளம். நெகிழ-நெகிழ்ச்சியை அடையவும். அன்பில்-பக்தியோடு; உருபு மயக்கம். நினைந்து-எண்ணி, எனை என்னை: இடைக்குறை. அல்லால்-அல்லாமல். அறிவுறா-வேறு எதையும் தெரிந்து கொள்ளாத மொழி-அவன் கூறும் வார்த்தைகள்: ஒருமை பன்மை மயக்கம். நல்ல-எனக்கு நல்லவையாக இருக்கின்றன. - பிறகு உள்ள 163-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

"உனக்கு அந்தத் திண்ணனுடைய செயலைக் காண் பிக்க, நாளைக்கு நீ இங்கே ஒளித்துக் கொண்டிருந்தால் எனக்கு அவனுடைய அன்பு இருக்கும் தன்மைகள் எல்லா வற்றையும் பார்க்கப் போகிறாய்; நீ உன்னுடைய மனக் கவலையை விட்டு விடுவாயாக' என வேதங்களை முறைப்படி அத்தியயனம் செய்து நிறைவேற்றிய அந்தண ராகிய சிவகோசரியாருக்குக் கனவில் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டுக் கங்கையாற்றின் நீரைத் தங்க வைத் திருக்கும் சடாபாரத்தைப் பெற்ற அழகிய திருமுடியைக் கொண்டவராகிய காளத்திந்ாதர் எழுந்தருளிச் சென்று விட்டார். பாடல் வருமாறு: -

  • உனக்கவன் தன் செயல்காட்ட காளை நீ -
  • - - - ஒளித்திருந்தால் எனக்கவன்தன் பரிவிருக்கும் பரிசெல்லாம் --

- - காண்கின்றாய்;. * மனக் கவலை ஒழி கென்று மறைமுனிவர்க் கருள்செய்து புனற்சடிலத் திருமுடியார் எழுந்தருளிப் போயினார் .'