பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயன்ார் புராணம் - 265.

மனமுறுமம் புதமாகி வரும்பயமும் உடனாகித் துணைபுரவித் தனித்தேர்மேல் தோன்றுவான்

. . . கதிர் தோன்ற ."

இந்தப் பாடல் குளகம். கனவு நிலை-சொப்பனம். காணும் நிலை. நீங்கிய-அகன்ற, பின்-பிறகு. விழித்துதுயிலிலிருந்து விழித்து எழுந்து. உணர்ந்து-உணர்ச்சியை அடைந்து. கங்குவிடை-முதல்நாள் இரவில். ப்: சந்தி, புனை தவத்து-தவத்தையே அணிகலனாகக் கொண்ட, மா-பெரு மையைப் பெற்ற, முனிவர்-அந்தணர்ாகிய சிவகோசரியார். புலர்வளவும்-விடிகிற வரைக்கும். கண்-தம்முடைய கண் களை ஒருமை பன்மை மயக்கம். துயிலார்-மூடி உறக் கத்தைக் கொள்ளாதவராகி; முற்றெச்சம். மனம்-தம் முடைய உள்ளத்தில். உறுப்-அடையும். அற்புதம் ஆகிஆச்சரியத்தை உடையவர்ாகி; திணை மயக்கம். வரும்உண்டாகும். பயமும் அச்சமும். உடனாகி-உடன்தோன்றிய வராகியிருக்க திணை மயக்கம். த், சந்தி. துணை-வேகமாக ஒடும். புரவி-ஏழு குதிரைகளைப் பூட்டிய ஒருமை பன்மை மயக்கம். தனி-ஒப்பற்ற த்: சந்தி. தேர்மேல்-இரதத்தின் மீது. தோன்றுவான் - காட்சியளிக்கின்றவனாகிய, கதிர்சூரியன். தோன்ற-உதயமாக.

பிறகு வரும் 165-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

சிவகோசரியார் முதல் நாள் வந்ததைப் போல வந்து அழகிய பொன்முகலியாற்றில் ஒடும் நீரில் முழுகிவிட்டுப் பல தடவைகளும் தம்முடைய தலைவனாகிய காளத்திநாதன் தம்முடைய கனவில் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தருளிச் செய்தவற்றை எண்ணி, நிலைபெற்று விளங்கும் அழகிய காளத்தி மலையின் மேல் ஏறி முன்பு செய்ததைப் போலப் பின்னிய சடாபாரத்தைப் பெற்றவனாகிய காளத்தி நாதனுக்குப் பூசையைப் புரிந்த பிறகு பின்பக்கமாக ஒளித்துக் கொண்டு மறைந்திருந்தார். பாடல் வருமாறு: