பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.366 - - பெரிய புராண விளக்கம-4

முன்னைநாள் போல்வந்து திருமுகலிப் புனல்மூழ்கிப் பன்முறையும் தம்பிரான் அருள்செய்த படிநினைந்து மன்னுதிருக் காளத்தி மலைஏறி முன்புபோல் பிஞ்ஞகனைப் பூசித்துப் பின்பாக ஒளித்திருந்தார் .' முன்னை-சிவகோசரியார் முதல். நாள்போல் வந்துநாளில் வந்ததைப் போல வந்து. திரு.அழகிய. முகவி-பொன் முகலியாற்றில் ஒடும். பொன்முகலி: இதை வடமொழியில் ஸ்வர்ணமுகி என்பர். ப், சந்தி. புனல்-நீரில், மூழ்கி.முழுகி விட்டு. ப்: சந்தி. பல்-பல. முறையும்- தடவைகளும்: ஒருமை பன்மை மயக்கம். தம்-தம்முடைய பிரான்-தலை வனாகிய காளத்தி நாதன். அருள் செய்த-தம்முடைய கனவில் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தருளிச் செய்த படிவார்த்தைகளின் விதத்தை நினைந்து-எண்ணி, மன்னு-நிலை பெற்று விளங்கும். திரு-அழகிய. க், சந்தி. காளத்தி மலை ஏறி-காளத்தி மலையின் மேல் ஏறி. முன்புபோல்-முன் நாட்களில் செய்ததைப் போல. பிஞ்ஞகனை பின்னிய சட்ாபாரத்தைப் பெற்றவனாகிய காளத்தி ந்ாதனுக்கு: உருபு மயக்கம், ப், சந்தி. பூசித்து-பூசையைப் புரிந்தபிறகு. ப் சந்தி. பின்பாக-பின்பக்கமர்க. ஒளித்திருந்தார்-ஒளித்துக் கொண்டு மறைந்திருந்தார். - - - -

அடுத்து வரும் 166-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: கருமையான மேகத்தைப் போல் நின்று கொண்டிருந்த உறங்காதவரும் வில்லை ஏந்தியவருமாகிய திண்ணனார் தாம் எழுந்தருளுகின்ற முறைப்படி ஆறாம் தினத்தில் வரும் இராத்திரி நேரம் அகன்ற சமயத்தில் பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாகிய இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறை வேற்றிய அந்தணராகிய சிவகோசரியார் காளத்தி மலைக்கு வந்து சேருவதற்கு முன்னால் தாம் சென்று விலங்குகளைப் பெறுகின்ற முறையில் முன்பு செய்ததைப் போலத் தனியாக பெரிய வேட்டையைப் புரிந்து பாடல் வருமாறு: - - .