பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - - 267

கருமுகில் என்னகின்ற கண்படா வில்லி யார்தாம் வருமுறை ஆறாம் நாளில் வரும் இர வொழிந்த காலை அருமறை முனிவ னார் வந் தணைவதன் முன்னம்

• ' - போகித் தரு முறைமுன்பு போலத் தனிப்பெரு வேட்டையாடி .' இந்தப் பாடல் குளகம். க்ரு-கருமையான. முகில்மேகம். என்ன-என்று கூறும் வண்ணம். நின்ற-நின்று கொண்டிருந்த கண்டதம்முடைய கண்களை ஒருமை பன்மை மயக்கம். படா-மூடி உறங்காத வில்லியார் தாம்வில்லை ஏந்தியவராகிய திண்ணனார். தாம்: அசை நிலை. வரும்-தாம் எழுந்தருளும். முறை-முறைப்படி. ஆறாம் நாளில்-ஆறாம் தினத்தில். வரும்-ஒவ்வொரு நாளும் வரும். இரவு- இராத்திரி வேள்ை. ஒழிந்த-அகன்ற, காலைசமயத்தில். அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அரும்ை யாக உள்ள மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய ஒருமை பன்மை மயக்கம். முனிவனார்-அந்தணராகிய சிவகோசரி யார். வந்து- காளத்தி மலைக்கு வந்து. அணைவதன்சேருவதற்கு. முன்னம்- முன்னர்ல். போகி-சென்று. த்: சந்தி. தரு-விலங்குகளைப் பெறுகின்ற முறை-முறையில். முன்பு போல-முன்பு செய்ததைப் போல. த், சந்தி. தனிதனியாக. ப்: சந்தி. பெரு-பெரிய, வேட்டை-வேட்டையை.

ஆடி-புரிந்து - . . .

பிறகு உள்ள 167-ஆம் பாடலின் கருத்துவருமாறு: 'திண்ணனார் தனக்கு நிகர் இல்லாத மாமிசமாகிய திருவமுதையும், பொன்முகலியாற்றிலிருந்து கொண்டு வந்த நல்ல அபிடேக நீரையும், தம்முடைய தலையில் செருகி ஏறிய அன்றலர்ந்த மலர்களையும், வேறு வேறாகிய பான்மையில் எடுத்துக் கொண்டு தம்மைத் தெளிவாக அறிந்து கொண்ட பக்தர்களுக்கு அமுதத்தைப் போன்றவரும், திருவருளாகிய செல்வத்தைப் பெற்றவரும்,