பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 268 பெரிய புராண விளக்கம்-4

அழகிய காளத்தி மலையில் திருக்கோயில் கொண்டு எழுந்: தருளியிருப்பவரும், கங்கையாறு தங்கும் சடாபாரத்தைப் பெற்ற திருமுடியை.உடையவரும் ஆகிய காளத்தி நாதரைச் சமீபத்தில் சென்று அடைகிறவரானார். பாடல் வருமாறு:

" மாறில்ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி

ஏறுநாள் மலரும் வெவ்வே றியல்பினில் அமைத்துக் & கொண்டு. தேறுவார்க் கமுதமான செல்வனார் திருக்காளத்தி ஆறுசேர் சடையார் தம்மை அணுகவங் தணையா

- கின்றார் . . மாறு-திண்ணனார் தனக்கு நிகர். இல்-இல்லாத; கடைக்குறை. ஊன்-மாமிசமாகிய, அமுதும்-திருவமு. தையும். நல்ல நல்லதாகிய, மஞ்சன-அபிடேகத்துக்குரிய, ப்: சந்தி. புனலும்-பொன்முகலியாற்றிலிருந்து கொண்டு வந்த நீரையும். சென்னி-தம்முடைய தலையில், ஏறும்செருகி ஏறிக்கொண்டிருக்கும். மலரும்- மலர்களையும்; ஒருமை பன்மை மயக்கம். வெவ்வேறு-வேறு வ்ேறான.இயல்: பினில்-பான்மையில். அமைத்துக் கொண்டு-அமையுமாறு: எடுத்துக் கொண்டு. தேறுவார்க்கு தம்மைத் தெளிவாக அறிந்து கொண்ட பக்தர்களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். அமுதம் ஆன-அமுதத்தைப் போன்றவரான, உவம ஆகு. பெயர். செல்வனார்-திருவருளாகிய செல்வத்தைப் பெற்ற வரும். திரு-அழகிய க்: சந்தி. காளத்தி-காளத்தி மலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவரும் இட ஆகுபெயர். ஆறு-கங்கையாறு. சேர்-தங்கும். சடையார் தம்மை-சடாபாரத்தைப் பெற்ற திருமுடியை உடைய காளத்தி நாதரை, தம்-அசைநிலை. அணுக வந்து-சமீபத்தில் சென்று. அணையா நின்றார்-அடைகிறவரானார். -

பின்பு உள்ள 168-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'திண்ணனார், இவ்வளவு நேரம் தாமதித்து விட்டேன்' என்று எண்ணி வேகமாகக் காளத்தி மலைக்குப் போகிறவராகிய அந்த வேடர் மிகுதியாக உள்ள பல.