பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 269

சகுனங்கள் யாவும் முறை முறையாகக் கெடுதலைப் புலப்படுத்த, "இத்தகைய கெட்ட சகுனங்கள் வந்து முன்னால் இரத்தத்தைக் குறிப்பிடும்; அடியேனுடைய தந்தையாகிய குடுமித்தேவனுக்கு என்ன துன்பம் நேரிட்டதோ? ஐயோ! என்ன அவனை அடுத்திருக்கிறது?” என்று அவர் காளத்தி மலைக்கு வரும் சமயத்தில். பாடல் வருமாறு: - -

  • இத்தனை பொழுது தாழ்த்தேன்' என விரைக்

தேகுவார் முன் மொய்த்தபல் சகுனம் எல்லாம் முறைமுறை.

. -- தீங்கு செய்ய இத்தகு தீயபுட்கள் ஈண்டமுன் உதிரம் காட்டும்; அத்தனுக் கென்கொல்? கெட்டேன்! அடுத்த தென்

- றனையும் போதில் .'

இந்தப் பாடல் குளகம். இத்தனை-திண்ணனார் 'இவ்வளவு. பொழுது-நேரம். தாழ்த்தேன் - தாமதம் செய்து விட்டேன். என-என்று எண்ணி; இடைக்குறை. விரைந்து- வேகத்தை மேற்கொண்டு. ஏகுவார்-போகிறவ ராகிய அந்த வேடருக்கு. முன்-முன்னால், மொய்த்த-மிகுதி யாக உண்டாகிய, பல்-பல. சகுனம்-நிமித்தங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-யாவும். முறை முறை-ஒவ் வொன்றும் முறையே முறையே. தீங்கு-கெடுதலை. செய்ய-புலப்படுத்த இத்தகு-இத்தகைய தீய-கெட்ட. :புட்கள்-சகுனங்கள். ஈண்ட-வந்து சேர்ந்து: எச்சத் திரிபு. முன்-எனக்கு முன்னால். உதிரம்-இரத்தத்தை. காட்டும்குறிப்பிடும். அத்தனுக்கு-என்னுடைய தந்தையைப் போன்ற குடுமித் தேவனுக்கு. என்கொல்-என்ன நேர்ந்ததோ. கொல் அசைநிலை. கெட்டேன். ஐயோ! அடுத்ததுஅவனுக்கு உண்டான கெடுதல் யாதேர்? என்று-என எண்ணி. அணையும்-காளத்தி மலையை அடையும். போதில்சமயத்தில், - - -