பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பெரிய புராண விளக்கம்-4

பிறகு வரும் 169-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தலைவராகிய திருக்காளத்தி மலையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சுவாமிகளாகிய காளத்தி நாதர் அந்தணராகிய சிவகோசரியாருக்குத் திண்ண னாருடைய அன்பைக் காண்பிக்கும் பொருட்டுத் தம்முடைய அழகிய கண்களில் ஒரு கண்ணிலிருந்து திடீரென்று. இரத்தம் வழிந்து தரையில் ஒட எழுந்தருளியிருந்தார்: துரத்தில் வரும்போதே அந்த அழகிய நிறத்தைக் கொண்ட கொடிய வில்லை ஏந்தியவராகிய திண்ணனார் அதைப் ப்ார்த்து மிக வேகமாக அந்த இடத்திற்கு ஓடி வந்தார். பாடல் வருமாறு: - - - அண்ணலார் திருக்காளத்தி அடிகளார். முனிவ - - னார்க்குத்

திண்ணனார் பரிவுகாட்டத் திருநயனத்தில் ஒன்று துண்ணென உதிரம்பாய இருந்தனர்; தூரத் தேஅவ் வண்ணவெஞ் சிலையார் கண்டு வல்விரைக்

`... . . . . தோடிவந்தார் .' அண்ணலார்-தலைவராகிய, 'பெருமையைப் பெற்ற வராகிய' எனலும் ஆம். திரு-அழகியூ க்: சந்தி, காளத்திகாளத்தி மலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும். அடிகளார்-சுவாமிகளாகிய காளத்தி நாதர். முனிவனார்க்கு - அந்தணராகிய சிவகோசரியாருக்கு. த்: சந்தி. திண்ணனார் - திண்ணனாருடைய, பரிவு. அன்பை. காட்ட காண்பிக்கும் பொருட்டு. த்: சந்தி. திரு.அழகிய நயனத்தில்-தம்முடைய கண்களில்: ஒருமை பன்மை மயக்கம். ஒன்று-ஒரு கண்ணிலிருந்து. துண்ணென-திடீரென்று. என: இடைக்குறை. உதிரம். இரத்தம். பாய-வழிந்து தரையில் ஒட. இருந்தனர்-எழுந்: தருளியிருந்தார். துரத்து-துரத்தில் வரும்போதே, ஏ. அசை நிலை. அவ் வண்ண-அந்த அழகிய நிறத்தைக் கொண்ட. வெம்-கொடுமையாகிய, சிலையார் - வில்லை ஏந்திய,