பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 盛7盈

திண்ணனார். கண்டு-அதைப் பார்த்து, வல் விரைந்து-மிக வேகமாக ஒடி வந்தார்-அந்த இடத்திற்கு ஓடி வந்தார்.

அடுத்து உள்ள 170-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அவ்வாறு வேகமாக ஓடிவந்த திண்ணனார் காளத்தி நாதருடைய கண்ணிலிருந்து வழியும் இரத்தத்தைப் பார்த். தார்; மயக்கத்தை அடைந்தார்; தம்முடைய வாயில் மொண்டு கொண்டு வந்திருந்த பொன் முகவியாற்றில் ஒடியல் நல்ல புனல் தரையில் சிந்த, தம்முடைய கரத்தில் வைத் திருந்த மாமிசமும் வில்லோடு சிதறித் தரையில் விழ், கொத்துக்களில் உள்ள மலர் மாலையாகிய திருப்பள்ளித். தாமம் தம்முடைய தலை மயிரிலிருந்து நழுவித் தரையில் விழ, பசுமையான தழைகளோடு கட்டிய மலர் மாலையை அணிந்த மார்பைப் பெற்றவராகிய அந்தத் திண்ணனார். தரையின் மேல் பதைபதைத்து விழுந்தார். பாடல் வருமாறு: - - .

வந்தவர் குருதி கண்டார், மயங்கினார்; வாயில்

சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி விழக் கொந்தலர் பள்ளித் தாமம் குஞ்சிகின் றலைந்து சோரப் பைந்தழை அலங்கல் மார்பர் கிலத்திடைப் பதைத்து

- வீழ்ந்தார் .' வந்தவர்-அவ்வாறு வேகமாக ஓடி வந்த திண்ணனார். குருதி-காளத்தி நாதருடைய கண்ணிலிருந்து வழியும் இரத் தத்தை. கண்டார்-பார்த்தார். மயங்கினார்-மயக்கத்தை அடைந்தார். வாயில்-தம்முடைய வாயில் ம்ொண்டு கொண்டு வந்திருந்த நல்-நல்ல. நீர்.பொன்முகலி ஆற்றின் புனல். சிந்திட-தரையில் விழ. க், சந்தி, கையில்-தம்முடைய கரத்தில் எடுத்துக் கொண்டு வந்திருந்த ஊனும். மாமிசமும். சிலையுடன் - வி ல் லே ா டு. சி த றிகையிலிருந்து நழுவி. வீழ-தரையில் விழ. க்: சந்தி. கொந்து-கொத்துக்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம், அலர்- மல்ர் மாலையாகிய ஆகு பெயர். பள்ளித்