பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பெரிய புராண விளக்கம்-4

தாமம்-திருப்பள்ளி எழுச்சியின்போது காளத்தி நாதருக்கு அணியும் மாலை. குஞ்சி நின்று-தம்முடைய தலை மயிரி லிருந்து. அலைந்து-கலைந்து. சோர-தரையில் விழ. ப்: சந்தி. பைம்-பசுமையான. தழை-தழைகளோடு கட்டிய; ஒருமை பன்மை மயக்கம். அலங்கல்-மலர் மாலையை அணிந்த, மார்பர்-மார்பைப் பெற்றவராகிய அந்தத் திண்ணனார். நிலத்திடை-தரையின் மேல். ப், சந்தி. பதைத்து-பதை பதைத்து. வீழ்ந்தார்-விழுந்தார்.

பின்பு உள்ள 171-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அவ்வாறு தரையின்மேல் விழுந்தவராகிய திண்ணனார் பிறகு தரையிலிருந்து எழுந்து போய்க் காளத்தி நாதருடைய கண்ணிலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தார்; வழியும் அந்த இரத்தம் நிற்பதை அவர் பார்க்கவில்லை; செய்யும் செயல் இன்னதென்று தெரிந்து கொள்ளாதவராய்ப் பெரு மூச்சை விட்டுக் கொண்டு மறுபடியும் வருத்தத்தை அடைந்து சென்று தரையில் விழுந்தார்; பிறகு ஒருவாறு தம்முடைய திருவுள்ளம் தெளிந்து 'இந்த அடாத செயலைச் செய்தவர் யார்?' என்று எண்ணித் தரையிலிருந்து எழுந்து நின்றார்; கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு திசைகளில் எல்லா இடத்திலும் நோக்கினார்; தம்முடைய கையில் வில்லையும் எடுத்துக் கொண்டார். பாடல் வருமாறு: .

விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி, வீழ்வ

தொழிந்திடக் காணார், செய்வ தறிந்திலர் உயிர்த்து

- r மீள அழிந்துபோய் வீழ்ந்தார்; தேறி, யார் இது செய்தார் ?" . - - என்னா எழுந்தனர்; திசைகள் எங்கும் பார்த்தனர்; எடுத்தார் . - வில்லும்.'

- விழுந்தவர்அவ்வாறு தரையின்மேல் விழுந்தவராகிய திண்ணனார். எழுந்து- பிறகு தரையிலிருந்து எழுந்து. சென்று-போய். குருதி-காளத்தி நாதருடைய கண்ணிலிருந்து