பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 275.

மலர்களைப் போன்ற திருவடிகளைப் பிடித்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் வண்ணம் அவரைத் தழுவிக்கொண்டு தம்முடைய கண்களிலிருந்து நீர்வழியக் கதறி அழுதார்.' பாடல் வருமாறு:

வேடரைக் காணார், தீய விலங்குகள் மருங்கும் எங்கும் காடியும் காணார்; மீண்டும் நாயனார் தம்பால் வந்து நீடிய சோகத் தோடு கிறைமலர்ப்பாதம் பற்றி மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணிர் வார." வேடரை-அவ்வாறு தேடிக்கொண்டு சென்ற திண்ண னார் ஒரு வேடரையும். க்: சந்தி. காணார். பார்க்க வில்லை. தீய - கெட்ட விலங்குகள் - மிருகங்களையும். மருங்கும்-காளத்தி மலையினுடைய பக்கங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-வேறு எந்த இடங்களிலும், ஒருமை பன்மை மயக்கம். நாடியும்-தேடிப் பார்த்தும், காணார்-அவர் பார்க்கவில்லை. மீண்டும்-மறுபடியும். நாயனார் தம்பால்- தம்முடைய தலைவராகிய காளத்தி நாதரிடம். தம்: அசை நிலை. வந்து- வந்து சேர்ந்து. நீடியநெடுநேரமாக இருந்த சோகத்தோடு-வருத்தத்தோடு. நிறை-அழகு நிறைந்த மலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பாதம். காளத்தி நாதருடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். பற்றி-பிடித்துக்கொண்டு. மாடு-பக்கத்தில். உற. இருக்கும் வண்ணம். க், சந்தி. கட்டிக்கொண்டு-அவரைத் தழுவிக் கொண்டு. கண்-தம்முடைய கண்களிலிருந்து: ஒருமை பன்மை மயக்கம். நீர்வார-நீர் வழிய, கதறினார். கதறி அழுதார். - - அடுத்து வரும் 174-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: மகா பாவியாகிய அடியேன் பார்த்தபடியாகப் பரமேசுவரராகிய காளத்திநாதருக்கு உண்டான துன்பம் யாதோ? உயிரைக் காட்டிலும் இனியவரும், அடியேங் க்ளுடைய தந்தையாரைப் போன்றவருமாகிய காளத்தி நாதருக்கு உண்டான துன்பம் என்னவோ? வந்து சேர்ந்