பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

খ্রষ্ঠ । பெரிய புராண விளக்கம்-4

தவர்கள் பிரியமுடியாத விமலராகிய இந்தக் காளத்தியப் பருக்கு வந்த துன்பம் யாதோ? உண்டானதாகிய ஒன்றை அடியேன் தெரிந்து கொள்ள முடியாதவனாக இருக்கி றேன்.' என்று கதறி விட்டுப் பிறகும். பாடல் வருமாறு:

பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க் கடுத்த

- - தென்னோ? ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க் கடுத்த

• * * - . தென்னோ? மேவினார் பிரிய மாட்டா விமலனார்க் கடுத்த

. . . தென்னோ? ஆவதொன் றறிகி லேன்யான் என்செய் கேன் ?"

. - என்று பின்னும். இந்தப் பாடல் குளகம், பாவியேன்.மகா பாவியாகிய அடியேன்.கண்ட-பார்த்தவண்ணம்.படியாக.பரமனார்க்குபரமேசுவரராகிய காளத்தி நாதருக்கு. அடுத்தது.உண்டான துன்பம். என்னோ-யாதோ. ஒ: அசை நிலை. ஆவியின் -என்னுடைய உயிரைக் காட்டிலும், இனிய-இனியவராகிய; வினையாலணையும் பெயர்.எங்கள்-அடியேங்களுடைய; இது திண்ணனார் தம்மையும் மற்ற வேடர்களையும் சேர்த்துச் சொன்னது. அத்தனார்க்கு-தந்தையாரைப் போன்றவராகிய காளஹஸ்தீசுவரருக்கு. அடுத்தது-வந்த துன்பம். என்னோஎதுவோ. ஒ: அசை நிலை. மேவினார்-தம்மை அடைந்தவர் கள்; ஒரும்ை பன்மை மயக்கம்.பிரியமாட்டா-பிரிய முடியாத. விமலனார்க்கு-இ ய ல் ப ாக .ே வ ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களிலிருந்தும் நீங்கினவருக்கு. அடுத்தது-அடைந்த இடர்ப்பாடு. என்னோ-எதுவோ. ஒ: அசை நிலை. ஆவது-இனிமேல் செய்வதாகிய, ஒன்றுஒரு செயலை. யான்- அடியேன். அறிகிலேன்- தெரிந்து கொள்ள முடியவில்லை. என்-என்ன. செய்கேன-புரிவேன். என்று-என்று திண்ணார் எண்ணி. பின்னும்-பிறகும்.

அடுத்து உள்ள 175-ஆம் பாடலின் கருத்து வருமாறு: - என்ன பரிகாரத்தைப் புரிந்தால் இவ்வாறு காளத்தி நாதருடைய கண்ணிலிருந்து வழியும் இரத்தம் நிற்கும்: