பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பெரிய புராண விளக்கம்-4

ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. புண்கள்-புண்களை. திர்க்கும்-ஆற்றிப் போக்கும். மெய்-உண்மையான, மருந்துமருந்தை. தேடி-தேடி எடுத்துக் கொண்டு. ப்: சந்தி. பொன்செய்-தங்கம் உண்டாகும். தாழ் வரையில்-அடிவாரத்தைப்

பெற்ற காளத்தி மலைக்கு உருபு மயக்கம், நான்-அடியேன்.

கொண்டு வருவன்-கொண்டு திரும்பி வருவேன். என்று-என: எண்ணி. போனார்-திண்ணனார் புறப்பட்டுச் சென்றார்.

பிறகு வரும் 176-ஆம் பாடலின் கருத்து வருமாறு: '

அவ்வாறு எண்ணியவராகிய திண்ணனார் வேறு வேறாக அடர்ந்து பரவியுள்ள காடுகள் எல்லாவற்றிலும், தன்னுடைய சாதியிலிருந்து பிரிந்து வந்த சிவந்த கண்களைக் கொண்ட காளை மாடு என்று கூறுமாறு அச்சத்தை மேற்கொண்டு அடைந்து தினைக் கொல்லையில் பல பச்சிலைகளைப் பறித்து எடுத்துக் கொண்டு எல்லா உயிர் களுக்கும் தலைவனாகிய காளத்திநாதனிடம் வைத்த தம்முடைய திருவுள்ளத்தைக் காட்டிலும் வேகமாக வந்து தாம் கொண்டு வந்திருந்த அந்தப் பச்சிலைகளாகிய மருந்துகளைக் காளத்தி நாதருடைய கண்ணில் பிழிந்து சொரிந்தார். பாடல் வருமாறு:

நினைத்தவர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும் இனத்திடைப் பிரிந்த செங்கண் ஏறென. வெருக்கொண்

- டெய்திப் புனத்திடைப் பறித்துக் கொண்டு பூதகா யகன்பால் - : - வைத்த

மனத்தினும் கடிது வந்தம் மருந்துகள் பிழிந்து

- வார்த்தார்." நினைத்தவர்.அவ்வாறு எண்ணியவராகிய திண்ணனார். வேறு வேறு - வேறுவேறாக நெருங்கிய-அடர்ந்து பரவி யுள்ள. வனங்கள்-காடுகள். எங்கும்-எல்லாவற்றிலும். இனத் திடை-தன்னுடைய சாதியிலிருந்து. ப்: சந்தி. பிரிந்த-பிரிந்து வந்த செம்-சிவந்த கண்-கண்களைக் கொண்ட ஒருமை