பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 279

பன்மை மயக்கம். ஏறு-காளை மாடு. என-என்று கூறுமாறு: இடைக்குறை. வெரு-அச்சத்தை. க்: சந்தி. கொண்டு-மேற் கொண்டு. எய்தி-அடைந்து. ப்: சந்தி. புனத்திடை-தினைக் கொல்லையில்; அந்தக் காடுகளில் எனலும் ஆம்; ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பறித்து-பல பச்சிலைகளைப் பறித்து. க்: சந்தி, கொண்டு-அவற்றை எடுத்துக் கொண்டு. பூத நாயகன் பால்-எல்லா உயிர்களுக்கும் தலைவனாகிய காளத்தி நாதனிடம். பூத: ஒருமை பன்மை மயக்கம். 'பல பூதங்களுக்குத் தலைவன்' எனலும் ஆம் வைத்த-வைத். துள்ள. மனத்தினும்-தம்முடைய திருவுள்ளத்தைக் காட்டி லும். கடிது-வேகமாக வாயு வேகம் மனோ வேகம் என்பது வழக்கு. வந்து-காளத்தி மலைக்கு வந்து. அம்மருந்துகள்தாம் பறித்துக்கொண்டு வந்திருந்த மருந்துகளாகிய 'பச்சிலைகளை. பிழிந்து-காளத்தி நாதருடைய கண்ணில்

பிழிந்து. வார்த்தார்-சொரிந்தார். -

அடுத்து வரும் 177-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்தத் திண்ணனார் பிழிந்து சொரிந்த பச்சிலை களாகிய மருந்தால் அழகிய காளத்தி மலையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அரசராகிய காளத்தி நாதருடைய கண்ணிலிருந்து வழிந்த புண்ணின் இரத்தம் குறையாமல் வழிவதைப் பார்த்ததும், இன்றைக்கு உள்ள 'இந்த நிலையை மாற்றுவதற்கு இனிமேல் அடியேன் செய்யத் தக்க பரிகாரம் எதுவோ?’ என்று எண்ணிப் பார்ப்பவராய், 'வந்த இந்த நோயைப் போக்குவது மாமிசத்துக்கு மாமிசமே' என்னும் வார்த்தையை முன்னால் தெரிந்து கொண்டார். பாடல் வருமாறு: -

  • மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்கா ளத்திக்

கொற்றவர் கண்ணிற் புண்ணிர் குறைபடா திழியக்

+" • . கண்டும் 'இற்றையின் கிலைமைக் கென்னோ இனிச்செயல்:

  • z- எனறு பாாபபாா *உற்றநோய் தீர்ப்ப துரனுக்கூன்' எனும் உரை முன்

-- கண்டார்.