பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280. - பெரிய புராண விளக்கம்.:

மற்று: அசை நிலை. அவர்-அந்தத் திண்ணனார். பிழிந்து-தம்முடைய கைகளாற் பிழிந்து. வார்த்த-சொரிந்த. மருந்தினால்-பச்சிலைகளாகிய மருந்தால், திரு-அழகிய, க்: சந்தி. காளத்தி-காளத்தி மலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். கொற்றவர்-அரசராகிய காளத்தி, நாதருடைய. கண்ணில்-கண்ணிலிருந்து வழிந்த உருபு. மயக்கம். புண் நீர்-புண்ணின் இரத்தம். குறை படாதுசிறிதும் குறையாமல். இழிய-வழிய. க், சந்தி. கண்டும்அதைப் பார்த்தும். இற்றையின் - இன்றையினுடைய. நிலைமைக்கு-இந்த நிலையை மாற்றுவதற்கு. இனி-இனி மேல். ச்: சந்தி. செயல்-அடியேன் செய்யத் தக்க பரிகாரம். என்-எது. ஒ: அசை நிலை, என்று-என எண்ணி. பார்ப்பார்பார்ப்பவராகி; முற்றெச்சம். உற்ற-வந்த நோய்-இந்தப் பிணியை. தீர்ப்பது-போக்குவது. ஊனுக்கு-மாமிசத்துக்கு. ஊன்-மாமிசமே. எனும்-என்னும்; இடைக்குறை. உரைவார்த்தையை. முன்-முன்னால். கண்டார்.அவர் தெரிந்து, கொண்டார். -

பிறகு உள்ள 178-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"இந்த நோயைப் போக்குவதற்கு இனிமேல் அடியேனு டைய கண்ணை ஓர் அம்பினால் தோண்டிக் காளத்தி நாதருடைய கண்ணில் அப்பினால் அடியேனுடைய தந்தையாரைப் போன்றவராகிய இந்தக் காளத்தியப் பருடைய கண்ணாகிய அதனுக்கு இந்தக் கண் மருந்தாகிப் புண்ணிலிருந்து வழியும் இரத்தம் நின்று விடவும் கூடும்' என எண்ணி, மதமதப்போடு எழும் திருவுள்ளத்துடன் மகிழ்ச்சியை அடைந்து காளத்திநாதருக்கு முன்னால் அமர்ந்து கொண்டு தம்முடைய விழியை முதலில் எடுத்த அம்பைக் கொண்டு தோண்டி எடுத்து முதல்வராகிய காளத்தீசுவரருடைய விழியில் அப்ப. பாடல் வருமாறு: இதற்கினி என்கண் அம்பால் இடந்தப்பின் எங்தை . . . . . oይ - - யார் கண்: அதற்கிது மருந்தாய்ப் புண்ணிர் நிற்கவும் அடுக்கும்.

எனறு