பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் - 28}.

மதர்த்தெழும் உள்ளத் தோடு மகிழ்ந்துமுன் இருந்து

- தம்கண் முதற்ச்ரம் மடுத்து வாங்கி முதல்வர்தம் கண்ணில் - - - அப்ப்.'

இந்தப் பாடல் குளகம். இதற்கு-இந்த நோயைப் போக்குவதற்கு. இனி-இனிமேல். என்-அடியேனுடைய. கண்-விழியை. அம்பால் - ஓர் அம்பினால். இடந்துதோண்டி. அப்பின்-காளத்தி நாதருடைய கண்ணில் அப்பினால். எந்தையார்-அடியேனுடைய தந்தையாரைப் போன்றவராகிய இந்தக் காளத்தி அப்பருடைய கண்விழியாகிய, அதற்கு அதனுக்கு. இது-அடியேனுடைய இந்தக் கண். மருந்தாய்-மருந்தாகி. ப்: சந்தி. புண்புண்ணிலிருந்து வழியும். நீர்-இரத்தம், நிற்கவும்-வழியாமல் நின்றுவிடவும். அடுக்கும் - கூடும். எ ன் று - எ. ன த், திண்ணனார் எண்ணி, மதர்த்து-மதமதப்போடு அமைந்து. எழும்-எழுந்திருக்கும். உள்ளத்தோடு - திருவுள்ளத்துடன். மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. முன்-காளத்தி நாதருக்கு. முன்னால். இருந்து-அமர்ந்து கொண்டு. தம்-தம்முடைய. கண்-விழியை. முதல்-முதலில் அம்புப் புட்டிலிலிருந்து எடுத்த. சரம்-அம்பை. மடுத்து-கொண்டு. வாங்கி-தோண்டி எடுத்து, முதல்வர் தம்-எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவராகிய காளத்தி நாதருடைய. தம் அசை நிலை, கண்ணில் அப்ப-விழியில் அப்பவே.

அடுத்து உள்ள 179-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: அவ்வாறு காளத்திநாதருடைய கண்ணில் தம்முடைய , கண்ணைத் தோண்டி எடுத்து அப்பவே, வழிவது நின்று போன சிவந்த இரத்தத்தைப் பார்த்தார்; தரையிலிருந்து மேலே குதித்துக் கொண்டு தாவினார்: மலைகள் என்று. சொல்லும்படி வளர்ச்சியைப் பெற்றிருந்த தம்முடைய தோள்களைத் தட்டிக் கொண்டார்; திண்ணனார் ஆனந்த நடனமும் ஆடி, "அடியேன் புரிந்த இந்தப் புத்திசாலித் தனமான செயல் நல்லது. என்று எண்ணவே, சிரிப்பும்