பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<2 = 2 - பெரிய புராண விளக்கம்-4

உண்டாக சேர்ந்த ஆனந்தத்தினால் பைத்தியக்காரரைப் போல மிகுதியான இன்பத்தை அடைந்தார். பாடல் வருமாறு:

நின்றசெங் குருதி கண்டார்; நிலத்தினின் றேறப்

- - பாய்ந்தார் குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும்

- - 呜号 *நன்று.நான் செய்த இந்த மதி' என நகையும் தோன்ற ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போல மிக்கார்.' நின்ற-அவ்வாறு காளத்தி நாதருடைய கண்ணில் தம்முடைய கண்ணைத் தோண்டி எடுத்து அப்பவே வழிவது நின்று போன. செம்-சிவந்த குருதி-இரத்தத்தை. கண்டார்திண்ணனார் பார்த்தார். இரத்தம் வழியாமல் நின்று விட்டதைப் பார்த்தார் என்பது கருத்து. நிலத்தினின்று; தரையிலிருந்து, ஏற-மேலே. ப்: சந்தி. பாய்ந்தார்-குதித்துக் குதித்துத் தாவினார். குன்று-மலைகள்: ஒருமை பன்மை மயக்கம். என-என்று கூறுமாறு; இடைக்குறை, வளர்ந்தவளர்ச்சியைப் பெற்றிருந்த தோள்கள் - தம்முடைய தோள்களை. கொட்டினார்-தட்டிக் கொண்டார். கூத்தும் ஆடி-ஆனந்த நடனமும் ஆடி. நான்-அடியேன். செய்தபுரிந்த இந்த மதி-இந்தப் புத்திசாலித்தனமான செயல்: ஆகுபெயர். நன்று-நல்லது. என-என்று எண்ணவே: இடைக்குறை. நகையும்-சிரிப்பும். தோன்ற-உண்டாக. ஒன்றிய-சேர்ந்த. களிப்பினால்-ஆனந்தத்தால், ஏ: அசை நிலை. உன்மத்தர் போல-பைத்தியக்காரரைப் போல. மிக்கார்மிகுதியான இன்பத்தை அடைந்தார்.

தோளுக்கு மலை: இதை முன்பே வேறோர் இடத்தில் கூறினோம். ஆண்டுக் கண்டுணர்க.

பின்பு வரும் 180-ஆம் பாடலின் கருத்து வருமாறு: தம்முடைய அழகிய வலக்கண்ணில் தம்முடைய கண்ணைப் பிடுங்கி அப்பிய வள்ளலாராகிய திண்ணனாரு