பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 283

டைய நல்ல பண்பைப் பிறகும் எடுத்துக் காட்டும் பொருட்டுத் தலைவராகிய காளத்தி நாதர் மற்றக் கண்ணா கிய இடக்கண்ணில் நீங்குதல் இல்லாத சிவந்த இரத்தம் வழிந்து தரையில் ஒட, அதை இந்த உலகத்தில் வேடர் களுடைய சாதியினர் முன்பிறப்பில் புரிந்த தவத்தின் பயனால் திருவவதாரம் செய்தருளித் தம்முடைய கொள்கை யினால் தேவர்களுக்கும் மேற்பட்டவராகிய திண்ணனார் பார்த்தார்.' ப்ாடல் வருமாறு:

வலத்திருக் கண்ணில் தம்கண் அப்பிய வள்ள லார்தம் கலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக்

கண்ணில் உலப்பில் செங் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர் குலப்பெரும் தவத்தால் வந்து கொள்கையின்

- - உம்பர் மேலார் .' வலத்திருக் கண்ணில்-தம்முடைய அழகிய வலப் பக்கத்து விழியில். தம்-தம்முடைய. கண்விழியைப் பிடுங்கி. அப்பிய-தம்முடைய கண்ணில் அப்பிய. வள்ள லார்தம்-வள்ளலாராகிய திண்ணனாருடைய. தம்: அசை நிலை. நலத்தினைநல்ல பண்பை, ப்: சந்தி. பின்னும்பிறகும்; மேலும். காட்ட-சிவகோசரியாருக்கு எடுத்துக் காட்டும் பொருட்டு. நாயனார்-தலைவராகிய காளத்தி நாதர். மற்றைக் கண்ணில்-மற்றக்கண்ணாகிய இடப் பக்கத்து விழியில். உலப்பு-நீங்குதல். இல்-இல்லாத: கடைக்குறை. செம்-சிவந்த குருதி-இரத்தம். பாயவழிந்து தரையில் ஒட. உலகில்-இந்த உலகத்தில் வாழும். வேடர்-வேடர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம்" குல-சாதியினர்; திணை மயக்கம், ப்: சந்தி. பெரும் தவத் தால்-தாங்கள் முன்பிறவியில் புரிந்த பெரிய தவத்தின் பயனால் ஆகுபெயர். வந்து-உடுப்பூரில் திருவவதாரம் செய்தருளி. கொள்கையின்-தம்முடைய கொள்கையினால். உம்பர்-தேவர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மேலார் - மேற்பட்டவராகிய திண்ணனார். க்: சந்தி. கண்டனர்-பார்த்தார்.