பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 பெரிய புராண விளக்கம்-4

அடுத்து உள்ள 181-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அவ்வாறு காளத்தி நாதருடைய இடப் பக்கத்துக் கண்ணிலிருந்து இரத்தம் வழிவதைப் பார்த்த திண்ணனார் பிறகு, "ஐயோ! எங்களுடைய காளத்தி நாதருடைய விழி ஒன்றில் புண்ணிலிருந்து வழியும் இரத்தம் நின்றுவிட, மற்றொரு விழியில் இரத்தம் பொங்கி மிகுதியாக வழியும் இந்த நிலைக்கு அடியேன் அச்சத்தை அடைய மாட்டேன்; மருந்தை அடியேன் கண்டு கொண்டேன்; இன்னும், அடியேனுக்கு ஒரு விழி இருக்கிறது. அந்த விழியைப் பிடுங்கி இவருடைய கண்ணில் அப்பி இரத்தம் வழிவதை, நீக்குவேன். என எண்ணி. பாடல் வருமாறு:

கண்டபின், கெட்டேன்! எங்கள் தாளத்தி யார்கண்

. . . . ". s ஒன்று. புண்தரு குருதி கிற்க மற்றைக்கண் குருதி பொங்கி மண்டும்மற் றிதனுக் கஞ்சேன், மருந்துகை கண்டேன்; - இன்னும்

உண்டெர்ரு கண், அக் கண்ண்ை இடந்தப்பி - ஒழிப்பேன்." என்று .' இந்தப் பாடல் குளகம். கண்ட-அவ்வாறு காளத்தி நாதருடைய இடப் பக்கத்துக் கண்ணிலிருந்து இரத்தம் வழிவதைப் பார்த்த திண்ணனார். பின்-பிறகு. கெட்டேன். ஐயோ. எங்கள்-அடியேங்களுடைய என்றது திண்ணனார் தம்மையும் மற்ற வேடர்களையும் சேர்த்துச் சொன்னது. காளத்தியார்-காளத்தி நாதருடைய. கண்-விழி. ஒன்று. -ஒன்றில், புண்-புண்ணிலிருந்து. தரு-வழியும். குருதிஇரத்தம், நிற்க-வழியாமல் நின்றுவிட மற்றைக்கண்மற்றொரு விழியில். குருதி-இரத்தம். பொங்கி மண்டும்டொங்கி மிகுதியாக வழியும், மற்று-அசை நிலை. இதனுக்குஇந்த நிலைக்காக. அஞ்சேன்-அடியேன் அச்சத்தை அடைய மாட்டேன். மருந்து-இதை நீக்கும் மருந்தை. கை கண்டேன்-அடியேன் அநுபவத்தில் கண்டு கொண்டேன். இன்னும்-இனிமேலும். உண்டு ஒருகண்-அடியேனுக்கு ஒரு