பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 . | - பெரிய புராண விளக்கம்-4

திருவடியை. ஊன்றி-ஊன்றிக்கொண்டு. உள் - தம்மு டைய திருவுள்ளத்தில். நிறை-நிரம்பியுள்ள. விருப்பி னோடும்-விருப்பத்தோடும். ஒருதனி-ஒர் ஒப்பற்ற, ப், சந்தி. பகழி-அம்பை. கொண்டு-தம்முடைய அம்புப் புட்டிலிலிருந்து எடுத்துக் கொண்டு. திண்ணனார் கண்ணில்-திண்ணனார் தம்முடைய விழியில். ஊன்ற-ஊன்றிய போது. த்: சந்தி. தேவதேவர்-தேவதேவராகிய காளத்தி நாதர். தரித்திலர்அதைச் சகிக்கவில்லை. - தேவதேவர்: "தேவர்கள் தேவர் எம்பெருமானார்.', தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் செய்வதே.", தேவர்தேவர் திரிசூலத்தர்., தேவதேவன் மன்னும்ஊர் திருந்துகாழி.' என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாய' னாரும், 'தேவர்கள் தேவர்போலும் திருப்பயற்றுா ரனாரே.', 'தேவதேவன் திருநெறியாகிய பூவனூர்.’’, தேவதேவன் சிவன்.', 'தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி.', 'தேவார்ந்த தேவனை." என்று திருநாவுக்கரசு நாயனாரும், "தேவதேவன் திருப்பெயர் ஆகவும்.', தேவர்கோ அறியாத தேவதேவன்.'", "மெய்த்தேவர் தேவர்க்கே சென்று தாய் கோத்தும்பீ.', 'சேட்டைத். தேவர்தம் தேவர் பிரானே.”, 'தேவர்தம் தேவே சிவ புரத்தரச்ே.', 'தேவதேவன் மெய்ச் சேவகன்.' என்று மாணிக்க வாசகரும்,'தேவதேவனைத் திருமறு மார்பனை.”, தேவ தேவனைத் திகழ்சிவலோகனை." என்று நக்கீரதேவ நாயனாரும், 'தேவதேவ திருவிடை மருத.’’ என்று பட்டினத்துப் பிள்ளையாரும், தேவ தேவேசனே.”, தேவதேவனும் அதுதிருவுளம் செய்து.', 'தேவர்கள்தம் பெருந்தேவர்.', 'தேவர் தேவனைத் திருக்கபாலீச்சரத் தமுதை.', 'தேவாதி தேவர் பிரான் திருத்தில்லை.” என்று: சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு வரும் 183-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'சிவந்த கண்களைப் பெற்ற வெண்மை நிறத்தைக் கொண்ட الاساسي வாகனத்தை ஒட்டுபவராகிய காளத்தி: